Naga Chaitanya, Samantha: சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து காரணம் இவரா? அதிர்ச்சி தகவல்!
Samantha: நடிகை சமந்தா பற்றிய புதிய தகவல் ஒன்று தெலுங்கு பட ஊடகங்கள் மூலம் வெளியாகி அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.
திரைத்துறையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நட்சத்திர ஜோடி சமந்தா மற்றும் நாக சைதன்யா. ஏ மாயா சேசவா படத்தில் இணைந்து நடித் தபோது ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் சமந்தா மற்றும் நாக சைதன்யாவிற்கு திருமணமும் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் சமந்தா தனது தொழிலை தொடர்ந்தார். திருமணத்திற்கு பிறகு சமந்தாவின் கேரியரில் பெரிய திருப்பம் ஏற்பட்டது. நடிகை பல வித்தியாசமான படங்களில் ஒரு பகுதியாக இருக்க முடிந்தது.
நடிகை சமந்தா, ஃபேமிலி மேன் தொடரின் மூலம் இந்திய அளவில் புகழ் பெற்றார். அவர் தொழில் பிஸியால் திருமணம் பாதிக்கப்பட்டதாக முன்பு செய்திகள் வந்தன. அந்தரங்க காட்சிகளில் நடிக்க சமந்தா விருப்பம் தெரிவித்த காரணத்தினால் நாக சைதன்யா கோபமடைந்ததாக செய்திகள் வெளியாகின.
தன்னைப் பற்றிய கிசுகிசுக்களுக்கு எதிராக சமந்தா களமிறங்கினார். இவர்களது விவாகரத்து முடிந்து நீண்ட நாட்களாகிவிட்டாலும் அவர்களைப் பற்றிய கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லாமல் செய்திகள் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் இருவரும் அதை பற்றி கண்டு கொள்வது இல்லை.
தற்போது சமந்தா பற்றிய புதிய தகவல் ஒன்று தெலுங்கு பட ஊடகங்கள் மூலம் வெளியாகி உள்ளது. இந்த அறிக்கைகளின் படி, விவாகரத்து முடிவை எடுக்க சிறந்த நண்பர் சமந்தாவிடம் சொன்னாராம். இதற்குக் காரணம் கடந்த நாள் சமூக வலைதளங்களில் சமந்தா பகிர்ந்த புகைப்படம்.
என்னுடைய எல்லா நல்ல முடிவுகளுக்கும் ஒரு முகம் இருந்தால் இதுதான் என்று கூறி தனது இளம் தோழியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் சமந்தா. பதிவின் கீழே சில கருத்துகள் வந்துள்ளன. அப்போது சிலர் விவாகரத்துக்கு பின்னால் இவர்கள் இருப்பதாக கருத்து தெரிவித்தனர். இதற்கு அவர் பதிலளிக்கவில்லை. தோழியின் தாக்கம் என்ன என்பதை சமந்தா குறிப்பிடவில்லை.
கடந்த இரண்டு வருடங்களில் விவாகரத்து, மயோசிட்டிஸ் காரணமாக திரைப்படங்களில் இருந்து சிறிது இடைவெளி எடுத்தல், மயோசிடிஸ் பற்றி மனம் திறந்து பேசுதல் போன்ற பல முக்கிய முடிவுகளை சமந்தா எடுத்து உள்ளார். அவர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஆறுதல் கூறினார். சமந்தாவுக்கு பெரிய நட்பு வட்டம் உள்ளது. விவாகரத்துக்கான காரணத்தை அவர் இன்னும் தெரிவிக்கவில்லை.
நாக சைதன்யாவும் கிசுகிசுக்களுக்கு எதிராக முன்பு பேசி ருக்கிறார். இருவரும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு நகர்ந்து உள்ளனர் என்றும் வதந்திகள் தேவையற்றது என்றும் நாக சைதன்யா சுட்டிக்காட்டினார். விவாகரத்துக்குப் பிறகு நடிகை ஷோபிதா துலிபாலாவுடன், நாக சைதன்யா டேட்டிங்கில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட் டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்