தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  S R Jangid Ips: ‘எச்.வினோத் கேட்ட கதை…’ மேடையில் உடைத்த ஓய்வு டிஜிபி ஜாங்கிட் !

S R Jangid IPS: ‘எச்.வினோத் கேட்ட கதை…’ மேடையில் உடைத்த ஓய்வு டிஜிபி ஜாங்கிட் !

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 14, 2022 06:15 AM IST

S R Jangid IPS Speech About director H Vinoth: ‘வீட்டிற்கு வந்த வினோத்திற்கு கம்யூட்டரில் எல்லா விபரங்களையும் காட்டினேன்’ -ஜாங்கிட்

ஓய்வு பெற்ற போலீஸ் டிஜிபி ஜாங்கிட்  -கோப்பு படம்
ஓய்வு பெற்ற போலீஸ் டிஜிபி ஜாங்கிட் -கோப்பு படம்

ட்ரெண்டிங் செய்திகள்

‘‘ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்துருக்கீங்க. போலீஸில் டாப்பில் டிஜிபி முதல் கடைசி கட்டத்தில் இருக்கும் கான்ஸ்டபிள் வரை பதவிகள் இருக்கு. படங்களில் பெரும்பாலும், எல்லா நடிகரும் டிஜிபி இல்லையென்றால், குறைந்தபட்சம் எஸ்.ஐ., கதாபாத்திரத்தில் நடிக்க தான் ஆசைப்படுவார்கள். அதிகாரிகளாக தான் நடிக்க விரும்புவார்கள்.

கீழ் மட்டத்தில் இருக்கும் போலீஸ் பதவிகளில் நடிக்க யாரும் விரும்புவதில்லை. அவர்களை பற்றி யாரும் கவனிப்பதில்லை; அவர்களின் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவதும் இல்லை. போலீஸ் துறையில் கான்ஸ்டபிள் தான் மிகக்குறைந்த பதவி.

ஆனால், போலீஸ் துறையில் நல்ல பெயர் வரணும், இல்லை கெட்டப் பெயர் வரணும் என்றால், அது அந்த கான்ஸ்டபிளின் நடத்தையில் தான் இருக்கிறது. அவர் பொதுமக்களை எப்படி அனுகுகிறார், அவர் கையில் இருக்கும் லத்தியை எப்படி பயன்படுத்துகிறார் அதில் தான் போலீசின் பெயர் இருக்கிறது.

ஆனால், அவங்க வாழ்க்கை ரொம்ப கஷ்டமா இருக்கும். டிராபிக்கில் நிற்கும் போலீசை நீங்கள் ஒரு நொடி பார்க்கிறீர்கள். உங்களை மாதிரி ஆயிரம் பேர், லட்சம் பேர் போவங்க, அத்தனை பேரும் அவரை திட்டுவாங்க. அத்தனை வாகனத்தின் புகை, தூசியை தாங்கிக் கொண்டு தான் அவர் அங்கு நிற்பார்.

ஒரு போலீஸ், ஒரு வாரண்ட் எடுத்து, ஒரு குற்றவாளியை பிடிக்க போனால், அவருக்கு எந்த பாதுகாப்பும் இருக்காது. இவ்வாறு போய் கை, கால்களை இழந்த நிறைய பேர் இருக்காங்க.

விழா ஒன்றில் ஜாங்கிட்  -கோப்பு படம்
விழா ஒன்றில் ஜாங்கிட் -கோப்பு படம்

நான் ஒரு மாவட்டத்தில் பணியாற்றிய போது, குற்றவாளிக்கு வெறும் சம்மன் கொடுக்க சென்ற போலீஸ்காரரை குடிபோதையில் இருந்த குற்றவாளி, அரிவாளால் வெட்டி விட்டார். 3 ஆண்டுக்கு முன்னர், தூத்துக்குடியில் குற்றவாளியை பிடிக்கப் போன கான்ஸ்டபிள் குண்டு வெடித்து இறந்துவிட்டார்.

நாங்க பெரிய பெரிய அதிகாரிகள், எங்களுக்கு எல்லா வசதியும் இருக்கும். எங்களுடன் பெரிய படை பாதுகாப்புக்கு வரும். ஆனால், அவர்களுக்கு அப்படி பாதுகாப்பு இருக்காது. அந்த சிரமங்களை தான் இந்த படத்தில் காட்டியிருக்கிறார்கள்.

சத்தியம் படத்தில் விஷால் பெரிய போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அதே விஷால் இன்று லத்தி படத்தில் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். போலீஸ் துறை சார்பாக, அவருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இயக்குனர் எச்.வினோத், 8 ஆண்டுக்கு முன்னாடி எனக்கு போன் செய்தார். நான் ஒரு படம் எடுக்கப் போகிறேன் , உங்களிடம் அது பற்றி ஆலோசிக்க வேண்டும், சனிக்கிழமை வரலாமா’ என்று கேட்டார். அவர் வந்தார், அவரிடம் கம்யூட்டரில் எல்லாவற்றையும் காட்டினேன். அந்த கதையை வைத்து, தீரன் அதிகாரம் ஒன்று படத்தை அவர் செய்தார். அதே வினோத் பெயர் தான், லத்தி படத்தின் இயக்குனரின் பெயர். இரு வினோத்களும் போலீஸ் படங்களை எடுத்திருக்கிறார்கள். இருவருமே போலீஸிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள், அவர்களுக்கு பாராட்டுக்கள்,’’

என்று அந்த விழாவில் ஜாங்கிட் பேசினார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்