தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Raghava Lawrence:விஜய் டிவி பாலாவிற்கு 10 லட்சம் கொடுத்த ராகவாலாரன்ஸ் - காரணம்?

Raghava Lawrence:விஜய் டிவி பாலாவிற்கு 10 லட்சம் கொடுத்த ராகவாலாரன்ஸ் - காரணம்?

Kalyani Pandiyan S HT Tamil
Apr 07, 2023 04:35 PM IST

பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் விஜய் டிவி பாலாவிற்கு 10 லட்சம் கொடுத்து இருக்கிறார்

மேடையில் ராகவா லாரன்ஸ் குடும்பத்தினர் மற்றும் பாலா
மேடையில் ராகவா லாரன்ஸ் குடும்பத்தினர் மற்றும் பாலா

ட்ரெண்டிங் செய்திகள்

இதில் இவர் இயக்கி நடித்த ‘முனி’ திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அதன் அடுத்தடுத்த பாகங்களை எடுக்க நினைத்த லாரன்ஸ் ‘காஞ்சனா’ ‘காஞ்சனா 2’ ‘காஞ்சனா 3’ படங்களை எடுத்தார். இந்த பாகங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. அதன் பின்னர் அவர் நடித்த சில படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ருத்ரன்.

இந்த திரைப்படத்தை பொல்லாதவன், ஆடுகளம், ஜிகிர்தண்டா போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படமானது வருகிற ஏப்ரல் 14 அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக பிரபல இயக்குநர்களான லோகேஷ் கனகராஜூம், வெற்றிமாறனும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை விஜய்டிவியின் மூலம் பிரபலமான பாலா தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் பாலா தன்னுடைய செலவில் பல ஏழை குழந்தைகளை படிக்க வைப்பதை தெரிந்து கொண்ட ராகவா லாரன்ஸ் இசை வெளியீட்டு மேடையில் அவரது தாயார் கையில் பாலாவிற்கு ரூ. 10 லட்சம் நன்கொடை அளித்திருக்கிறார்.

காலில் விழுந்த பாலா
காலில் விழுந்த பாலா

ராகவா லாரன்ஸ் ஏற்கனவே அவரது தாயார் பெயரில் அறக்கட்டளை ஒன்று நடத்தி ஊனமுற்றோர்களுக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராகவாலாரன்ஸ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘ஜிகிர்தண்டா 2’, பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் ‘சந்திரமுகி 2’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். சந்திரமுகி 2 படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்