தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Priya Bhavani: ‘என்னோட ஹோட்டலுக்கு சமையல்காரர் வேணும்’ - பிரியா பவானி ஷங்கர்!

Priya Bhavani: ‘என்னோட ஹோட்டலுக்கு சமையல்காரர் வேணும்’ - பிரியா பவானி ஷங்கர்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 28, 2023 10:51 AM IST

தான் ஆரம்பித்திருக்கும் புதிய ஹோட்டலுக்கு சமையல்காரர் வேண்டும் என்று பிரியா பவானி ஷங்கர் அறிவித்துள்ளார்.

பிரியா பவானி ஷங்கர்
பிரியா பவானி ஷங்கர் (priya instagram )

ட்ரெண்டிங் செய்திகள்

 

பொதுவாக சினிமா என்பது நிரந்தரமிலலாத தொழில் என்பதால், நடிகைகள் இதில் கிடைக்கும் பணத்தை பிற தொழில்களில் முதலீடு செய்வது வழக்கமான ஒன்று. இந்த வரிசையில் நயன்தாரா, தமன்னா, காஜல் உள்ளிட்ட பல நடிகைகள் இருக்கின்றனர். இதில் பிரியா பவானி ஷங்கரும் விதிவிலக்கல்ல. ஆம், அண்மையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தான் ஒரு தனியார் ஹோட்டல் ஒன்றை தொடங்கி இருப்பதாகவும், அதற்கு LIAM’s Diner என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்து இருந்தார். இதற்கு பலரும் வாழ்த்துகளை கூறி வந்த நிலையில், அந்த ஹோட்டலில் பணிபுரிய சமையல்காரர் மற்றும் ஊழியர்கள் வேண்டும்” என்று தற்போது தெரிவித்து இருக்கிறார்.

 

முன்னதாக கடந்த ஆண்டு இறுதியில் பீச் ஓரத்தில் புது வீடு வாங்கி இருப்பதை அறிவித்து இருந்தார். அத்துடன் தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டார்.

அதில் , “ எங்களுக்கு 18 வயது இருக்கும் போது கடற்கரை இருப்பது மிகவும் விருப்பமானதாக இருந்தது. அப்போது நிலாவை பார்த்துக் கொண்டே இங்கே ஒரு வீடு கட்ட வேண்டும் என்று கனவு கண்டோம். அந்த கனவு இன்று நனவாகி, எங்கள் புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கிறோம் ” என குறிப்பிட்டு இருந்தார்.

.

IPL_Entry_Point

டாபிக்ஸ்