தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Nayanthara Connect Movie Trailer Released

Connect Trailer: திக் திக் காட்சி… நள்ளிரவில் வெளியான கனெக்ட் ட்ரெய்லர்

Aarthi V HT Tamil
Dec 09, 2022 09:47 AM IST

நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள கனெக்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கனெக்ட் ட்ரெய்லர்
கனெக்ட் ட்ரெய்லர்

ட்ரெண்டிங் செய்திகள்

ட்ரெய்லர் முழுக்க திகில் நிறைந்தது. இதில் நயன்தாராவும், வினய் ராயும் கணவன் மனைவியாக நடித்துள்ளனர். நயன்தாராவின் அப்பாவாக சத்யராஜ் நடித்து உள்ளார். மகள் அம்முவுடன் மகிழ்ச்சியாக நடந்து கொண்டிருக்கும் இவர்களது வாழ்க்கையில் ஒரு பேய் எப்படி குழப்பத்தை ஏற்படுத்தியது என்பதை ட்ரெய்லர் த்ரில்லிங்காக காட்டுகிறது.

லாக்டவுன் நேரத்தில் கதை அமைக்கப்பட்டுள்ளதால், படத்தின் முக்கிய காட்சிகள் போன் திரைகள் மூலம் படமாக்கப்பட்டது. கொரோனா பாசிட்டிவ் காரணமாக வீட்டிலேயே இருக்க வேண்டியதாயிற்று என்று சத்யராஜிடம் நயன்தாரா கூறுவதும், வீட்டில் பேய் இருப்பது போல் காட்டுவதும் பரபரப்பானது.

இதுவரை இப்படி நடந்து கொண்டதில்லை என்று மகள் அம்முவை காக்க ஏங்கும் தாயாக நயன்தாரா சிறப்பாக நடித்துள்ளார்.

இந்தப் படம் 99 நிமிடங்கள் இடைவெளி இல்லாமல் வெளியாகவுள்ளது. இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்குகிறார்.

நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இந்தப் படத்தை தயாரித்தார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகிறது. யுவி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தெலுங்கில் வெளியிடுகிறது. இப்படம் வரும் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்