தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Lokesh Kanagaraj And Shruthi Haasan Starrer Inimel Song Teaser Is Out

Lokesh Kanagaraj: கமலை மிஞ்சிய லோகேஷ்..! ஸ்ருதியுடன் கட்டிப்பிடி ரொமான்ஸ் - Vibeஐ ஏற்படுத்திய இனிமேல் பாடல் டீசர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 21, 2024 07:54 PM IST

ரெமான்ஸில் கமலையே மிஞ்சும் விதமாக அவரது மகள் ஸ்ருதிஹாசனுடன் ரெமான்ஸ் செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இனிமேல் பாடல் டீசரில் ஸ்ருதி - லோகேஷ் கெமிஸ்ட்ரியை பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.

இனிமேல் பாடல் டீசரில் லோகேஷ் கனகராஜ் - ஸ்ருதிஹாசன்
இனிமேல் பாடல் டீசரில் லோகேஷ் கனகராஜ் - ஸ்ருதிஹாசன்

ட்ரெண்டிங் செய்திகள்

இது என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த நிலையில் சுமார் ஒரு மாதம் கழித்து லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளான மார்ச் 14ஆம் தேதி அந்த போஸ்டர் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி லோகேஷ் கனகராஜ் - ஸ்ருதிஹாசன் இணைந்து இனிமேல் என்ற டைட்டிலில் பாடல் விடியோ ஒன்றை வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக போஸ்டரும் வெளியிடப்பட்டது.

நடிகராக லோகேஷ் கனகராஜ்

இதன் பின்னர் மார்ச் 19ஆம் தேதி இனிமேல் பாடலில் லோகேஷ் கனகராஜ் நடிப்பதாகவும், பாடலை கமல்ஹாசன் எழுத, ஸ்ருதிஹாசன் எழுதுவதாகவும் சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியானது.

அதன் பின்னர் மாப்பிள்ளை, பெண் போல் லோகேஷ், ஸ்ருதி அமர்ந்திருக்கும் போஸ்டரும் வெளியாகி, பாடலின் டீஸர் குறித்து தெரிவிக்கப்பட்டது.

இனிமேல் டீசர்

இதைத்தொடர்ந்து இனிமேல் பாடல் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 18 விநாடிகள் ஓடக்கூடிய இந்த பாடல் டீசரில் லோகேஷ் கனகராஜ் - ஸ்ருதிஹாசன் இடையிலான ரெமான்ஸ் காட்சிகள் இடம்பிடித்திருப்பதுடன், முழு பாடம் வரும் 25ஆம் தேதி யூடியூப்பில் ஸ்டீரிம் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டீசருக்கு பின்னர் ரசிகர்கள் மத்தியில் இந்த பாடல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப்பில் பக்கத்தில் பாடல் வெளியாக இருக்கிறது.

தெறிக்க விடும் லோகேஷ் - ஸ்ருதி கெமிஸ்ட்ரி

இந்த டீஸரில் லோகேஷ் - ஸ்ருதி ஜோடியின் கெமிஸ்ட்ரி தெறிக்க விடும் விதமாக இருப்பதாக இணையவாசிகள் அட என ஆச்சரியமும் , உச் கொட்டியும் வருகிறார்கள். கமலையே மிஞ்சும் விதமாக அவரது மகள் ஸ்ருதியிடம் ரெமான்ஸில் ஈடுபட்டுள்ளார் லோகேஷ் என அவரது நடிப்பு அவதாரத்தையும் பலர் புகழ்ந்து வருகிறார்கள்.

தலைவர் 171 படம்

தளபதி விஜய்யின் லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தில் மலையாள நடிகர் ப்ருத்விராஜ், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராக மாறியிருப்பதுடன், ஸ்ருதியுடன் ரொமான்ஸ் என ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சலார் 2 படத்தில் ஸ்ருதிஹாசன்

கடந்த டிசம்பரில் வெளியான சலார் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். இதைதத்தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையே தந்தை கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் இணைந்து இனிமேல் என்ற மியூசிக் விடியோவை உருவாக்கியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்