தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kantara 2 : உருவாகிறது ‘காந்தாரா 2’ ஷூட்டிங் எப்போது? - தயாரிப்பாளர் பேட்டி!

Kantara 2 : உருவாகிறது ‘காந்தாரா 2’ ஷூட்டிங் எப்போது? - தயாரிப்பாளர் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 21, 2023 02:13 PM IST

ரிஷப் ஷெட்டி காந்தாரா 2 படத்திற்கான கதையை எழுதிக்கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு மாதங்களாக தன்னுடைய உதவி இயக்குநர்களுடன் கர்நாடகா கடற்கரைப்பகுதிக்கு சென்று, படத்திற்கான ஆராய்ச்சியை செய்து வருகிறார்.

காந்தாரா 2
காந்தாரா 2

ட்ரெண்டிங் செய்திகள்

 1800 களில் குறுநில மன்னர் ஒருவர் பழங்குடிகளுக்கு தனக்கு சொந்தமான வனப்பகுதியை தானமாக எழுது வைப்பார். அதற்கு பதிலாக பழங்குடிகள் தங்களுடைய தெய்வத்தை அவருக்கு வழங்குவர். நிலத்தை எந்த காலத்திலும் திறம்ப பெறக்கூடாது என்று தெய்வம் கட்டளை இட்டிருக்கும் நிலையில், மன்னனின் சந்ததியினர் மக்களிடம் இருந்து நிலங்களை பிடுங்க முயற்சிப்பர். இறுதியில் தெய்வம் ரிஷப் ஷெட்டி ரூபத்தில் வந்து மக்களை காப்பாற்றுவதை அடிப்படையாக வைத்து காந்தாரா படம் உருவாக்கப்பட்டு இருந்தது. உலகம் முழுவதிலும் பாராட்டுகளை குவித்த இந்தப்படம் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப்படத்தின் வெற்றியை சமர்பிக்கும் விதமாக காந்தாரா படக்குழுவினர் கர்நாடகாவில் நடைபெற்ற பூதகோலா விழாவிலும் பங்கேற்றனர்.

 

இந்த நிலையில் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கூறி பேட்டி கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசும் போது, “ரிஷப் ஷெட்டி காந்தாரா 2 படத்திற்கான கதையை எழுதிக்கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு மாதங்களாக தன்னுடைய உதவி இயக்குநர்களுடன் கர்நாடகா கடற்கரைப்பகுதிக்கு சென்று, படத்திற்கான ஆராய்ச்சியை செய்து வருகிறார். 

படத்தின் ஒரு பகுதியை எடுக்க மழைக்காலம் தேவைப்படுவதால் படத்தை ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார். இந்தப்படத்தை ஒரு பான் இந்தியா படமாக அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியிடும் எண்ணம் இருக்கிறது.” என்று பேசியுள்ளார்.

இந்தப்படம் காந்தாரா படத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், முன்பகுதியாக உருவாக இருக்கிறது; படத்தின் பட்ஜெட் மட்டுமே அதிகரித்துள்ளது. கதை சொல்லும் முறை, ஒளிப்பதிவு உள்ளிட்டவை அதே தரத்தில் இருக்கும் என பேசப்படுகிறது.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்