Kangana Ranaut: வேறு ஒருவரை காதலிக்கிறேன்.. மனம் திறந்த கங்கனா ரனாவத்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kangana Ranaut: வேறு ஒருவரை காதலிக்கிறேன்.. மனம் திறந்த கங்கனா ரனாவத்

Kangana Ranaut: வேறு ஒருவரை காதலிக்கிறேன்.. மனம் திறந்த கங்கனா ரனாவத்

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 26, 2024 12:38 PM IST

இந்த நிலையில் சமீபத்தில் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு சென்று இருந்த கங்கனா ரனாவத் அங்கு தொழில் அதிபர் ஒருவருடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

கங்கனா
கங்கனா

நடிகை கங்கனா ரனாவத் எப்போதும் சமூகவலைதங்களில் ஒளிவு மறைவின்றி கருத்துகளை தெரிவித்து வருவார். இவரது கருத்துக்கள் பல சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி விடும். இந்த நிலையில் சமீபத்தில் கங்கனா ஒருவருடன் கை கோர்த்த படி இருந்த புகைப்படம் வெளியானது. அந்த நபரைத்தான் கங்கனா காதலிப்பதாக தகவல்கள் பரவின. இதையடுத்து அவர் எனது "ஹேர் ஸ்டைலிஸ்ட் " என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு சென்று இருந்த கங்கனா ரனாவத் அங்கு தொழில் அதிபர் ஒருவருடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து அந்த தொழிலதிபரை கங்கனா ரனாவத் காதலிப்பதாக தகவல்கள் பரவியது. இதனால் அதிருப்தி அடைந்த கங்கனா அதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில்" தொழில் அதிபரை காதலிப்பதாக வரும் தகவலில் உண்மை இல்லை. அது வெறும் வதந்திதான் தயவு செய்து பொய்யான தகவல்களை பரப்புவதை நிறுத்துங்கள். அந்த தொழில் அதிபர் திருமணமாகி குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறால் நான் வேறு ஒருவரை காதலிக்கிறோன். அவர் யார் என்பதை தக்க நேரத்தில் அறிவிப்பேன். அதுவரை பொறுத்திருங்கள் . இரண்டு பேர் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டால் அவர்கள் உறவை பற்றி தகாத முறையில் பேசுவது சரியல்ல என்று கூறி உள்ளார்.

பாலிவுட்டில் கலக்கி வந்த நடிகை கங்கனார் தமிழில் ஜெயம்ரவியுடன் இணைந்து தாம் தூம் படத்தில் தமிழில் அறிமுகமானார். பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகிய தலைவி படத்தில் நடித்திருந்தார். 

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு தமிழில் 'சந்திரமுகி 2' திரைப்படம் வெளியானது. மேலும் இந்தியில் 'தேஜஸ்' திரைப்படம் வெளியாகின. ஆனால் இரண்டு படங்களும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.  அதேசமயம் 'மணிகர்ணிகா பிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் இவர் தயாரித்த டிக்கு வெட்ஸ் சிரு திரைப்படமும் மோசமான விமர்சனங்களையே பெற்றது.

முன்னதாக "அயோத்தியில் நடைபெற்ற ராம் மந்திர் பிரான் பிரதிஷ்டா விழாவில் கலந்து கொண்ட ஒரு நாள் கழித்து நடிகை கங்கனா தனது இயக்கத்தில் வரவிருக்கும் எமர்ஜென்சி படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருந்தார். கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமர்ஜென்சி படத்தின் புதிய போஸ்டரையும் பகிர்ந்திருந்தார். இப்படத்தை கங்கனா எழுதி இயக்கி உள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

எமர்ஜென்சி படத்தை இயக்கியதும், அதில் நடித்ததும், எமர்ஜென்சி படத்தை இயக்கியதும், அதில் நடித்ததும் குறித்து கங்கனா கூறுகையில், “எமர்ஜென்சி என்பது நமது வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகும்.

இது ஒரு முக்கியமான கதை, இந்த படைப்பு பயணத்தை ஒன்றாக தொடங்கிய மறைந்த சதீஷ் ஜி, அனுபம் ஜி, ஸ்ரேயாஸ், மஹிமா மற்றும் மிலிந்த் போன்ற எனது திறமையான நடிகர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியாவின் வரலாற்றிலிருந்து இந்த அசாதாரண அத்தியாயத்தை பெரிய திரைக்கு கொண்டு வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஜெய் ஹிந்த் ! ”

இந்த படம் மீது பாலிவுட்டில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.