10 Years of Nedunchalai : மங்கா-முருகன் காதல்.. தாமிரபரணியில் நீந்தி வந்த.. ரிப்பிட் மோடில் ஒலித்த பாடல்!
மாசானமுத்துவுக்கு மங்காவை அடைய வேண்டும் என்ற எண்ணம். மங்காவை அடைய துடிக்கும் மாசானமுத்துவிடம் இருந்து மங்காவை முருகன் எப்படி காப்பாற்றுகிறான், இவர்களுக்குள் நடக்கும் அந்த பரபர சம்பவம் தான் இப்படத்தின் கதை.
2014ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி கிருஷ்ணா எழுதி இயக்கி வெளியான திரைப்படம் தான் நெடுஞ்சாலை. இப்படம் ஆஜு, சௌந்தரராஜன், தீரஜ் கெர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தில் ஆரி அர்ஜூன், ஷிவதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தம்பி ராமையா, பிரசாந்த் நாராயணன் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சில்லுன்னு ஒரு காதல் படம் செம ஹிட் ஆன படம். சூர்யா ஜோதிகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருபார்கள். நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தை இயக்கியவர் தான் நெடுஞ்சாலை படத்தையும் இயக்கி இருப்பார். அதனாலயே இப்படத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இவரது இயக்கத்தில் பத்து தல படமும் வெளியானது.
அவரது நடிப்புக்குத் தீனி போடும் வகையில் அமைந்த படம் தான் நெடுஞ்சாலை. கதாநாயகியாக ஷிவதா நடித்திருந்தார். பிரசாந்த் நாராயணன் வில்லன் கதாபாத்திரத்திலும், தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.
இப்படத்தில் முருகன் என்ற கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுன் நடித்து இருப்பார். இளம் முருகனாக கிஷோர் டி.எஸ் நடித்து இருப்பார். அதேபோல
மங்கா கதாபாத்திரத்தில் ஷிவதாவும், மாசானமுத்து என்ற கதாபாத்திரத்தில் பிரசாந்த் நாராயணனும், தம்பி ராமையா மாஸ்டர் கதாபாத்திரத்திலும்,
மாட்டு சேகர் கதாபாத்திரத்தில் சலீம் குமாரும், சூழி கதாபாத்திரத்தில் அஷ்வின் ராஜாவும், சேட்டு கதாபாத்திரத்தில் கிஷோர் குமாரும், மணி ஹோட்டல் உதவியாளராக கென் கருணாஸ், முருகனின் வளர்ப்புத் தந்தையாக தவசியும் நடித்து இருப்பார்கள்.
படத்தின் கதை
நெடுஞ்சாலையில் வாகனங்களில் குறிப்பாக லாரிகளில் தொடர் திருட்டில் ஈடுபடுகிறார் தார்ப்பாய் முருகன். மங்கா நெடுஞ்சாலையில் உணவகத்தை நடத்தி வருகிறார். காதல் மோதலில் தான் வரும் என்பது போல முருகனும், மங்காவும் பார்த்த போது எல்லாம் முட்டி கொள்கிறார்கள். அந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் மாசானமுத்து காவல் ஆய்வாளராக வருகிறார்.
மாசானமுத்துவுக்கு மங்காவை அடைய வேண்டும் என்ற எண்ணம். மங்காவை அடைய துடிக்கும் மாசானமுத்துவிடம் இருந்து மங்காவை முருகன் எப்படி காப்பாற்றுகிறான், இவர்களுக்குள் நடக்கும் அந்த பரபர சம்பவம் தான் இப்படத்தின் கதை.
நெடுஞ்சாலை ஓரம் கதாநாயகி உணவகம் வைத்து நடத்துகிறார், கதாநாயகன் எதார்த்தமான கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் வித்தியாசமான, புதுமையான கதையுடன் கிருஷ்ணா இயக்கியிருந்தார் என்றே சொல்லலாம்.
தார்ப்பாய் முருகனாக ஆரி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். லுங்கி, பனியன், மூக்கின் வலதுபக்கத்தில் வளையம் என வித்தியாசமான தோற்றத்தில் நடித்தார். காவல் துறை அதிகாரியாக மிரட்டல் கதாபாத்திரத்தில் மாசானமுத்துவாக அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பிரசாந்த் நாராயணன். அதன்பிறகு என்னவோ தமிழில் அவருக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. தம்பி ராமையா நைடாண்டி காமெடியும் ரசிக்க வைத்தது. ஷிவதா அப்பாவி மங்கா பெண் கதாபாத்திரத்தில் பொருந்தியிருந்தார்.
இப்படத்தில் இடம்பெற்ற
”இவன் யாரோ இவன் தான் யாரோ புரியவில்லை
எனக்காக எதற்காய் வந்தான் தெரியவில்லை
இவன் யாரோ இவன் தான் யாரோ புரியவில்லை
இளநீரோ இமையின் நீரோ தெரியவில்லை ”
அதேபோல இப்படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடாலான
”தாமிரபரணியில் நீந்தி வந்த...
என் ஆவாம் பூவிலையே...
ஆயிரம் கனவ நீ வெதச்சுப் புட்டு
கை வீசி போறவளே
கரட்டு காட்டுக்குள்ள மொளச்ச நெல்ல போல
மொரட்டு நெஞ்சுக்குள்ள முட்டி வந்து மொளச்ச
எதுக்கு குத்த வச்ச மனச பத்த வச்ச
கொசுவம் போல என்ன பின்ன வச்சு முடியடியே” இப்பாடலும் ல் படம் வெளியான ஆண்டு முழுவதும் ஒலித்துக் கொண்டே இருந்தது. இப்பாடல் இப்படம் ரிலீஸ் ஆன சமயத்தில் அனைத்து இசை சேனல்கள், பேருந்துகள், திருவிழாக்கள், ஆட்டோக்களில் என எங்கு பார்த்தாலும் ஒலித்து கொண்டே இருந்தது. அந்த அளவிற்கு இப்பாடல்கள் ஹிட் ஆனது. அதேபோல இப்பாடலில் ஆரி, ஷிவதா இருவரின் நடிப்பும், பாடல்காட்சி அமைக்கப்பட்ட விதமும் அற்புதமாக இருக்கும். கேட்கவும், பார்க்கவும் அருமையாக இப்பாடல் உருவாக்கப்பட்டு இருக்கும்.
இப்பாடல் 1987-களில் நடக்கும் கதைபோல காட்சிபடுத்தப்பட்டு இருக்கும். இப்பாடலுக்கு சத்யா இசையமைத்து இருப்பார். அதேபோல இப்பாடலை ராஜவேல் படமாக்கிய விதமும் அட்டகாசமாக இருக்கும். ஆரி இப்படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று தனது குணத்தால் மக்கள் மனதை வென்றார். இப்படம் வெளியாகி இன்றும் 10 ஆண்டுகள் ஆகிறது.