தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thambiramaiah: வருங்கால மருமகள் ஐஸ்வர்யா அர்ஜூனுக்கு கண்டிஷன் போட்ட தம்பி ராமையா - கடுப்பில் சிலர்.. என்னவாம்?

Thambiramaiah: வருங்கால மருமகள் ஐஸ்வர்யா அர்ஜூனுக்கு கண்டிஷன் போட்ட தம்பி ராமையா - கடுப்பில் சிலர்.. என்னவாம்?

Marimuthu M HT Tamil
Nov 03, 2023 01:10 PM IST

ஐஸ்வர்யா அர்ஜூன், தம்பி ராமையா ஆகிய இருவரும் மருமகள் - மாமா என்னும் பந்தத்தில் இணையவுள்ள நிலையில் அவர்கள் குறித்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.

வருங்கால மருமகளுக்கு கண்டிஷன் போட்ட தம்பி ராமையா - கடுப்பில் சிலர்.. என்னவாம்?
வருங்கால மருமகளுக்கு கண்டிஷன் போட்ட தம்பி ராமையா - கடுப்பில் சிலர்.. என்னவாம்?

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருபவர், தம்பி ராமையா. இவரது மகன் உமாபதி. 2017ஆம் ஆண்டு, அதாகப்பட்டது மகாஜனங்களே என்னும் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின், மணியார் குடும்பம், சேரனின் திருமணம், தண்ணி வண்டி ஆகியப் படங்களில் நடித்தார். பின், 2021ஆம் ஆண்டு, சர்வைவர் என்னும் தமிழ் நிகழ்ச்சியில் பங்குகொண்டார். அங்கு மற்றொரு பங்கேற்பாளராக ஐஸ்வர்யா அர்ஜூன் கலந்துகொண்டார். இவர், நடிகர் அர்ஜூனின் மகள் ஆவார். அங்கு ஐஸ்வர்யா அர்ஜூனுக்கும், உமாபதி தம்பி ராமையாவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவுஎடுத்த நிலையில், தங்களது காதல் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர்.

 இந்நிலையில் இருதரப்பு வீட்டிலும் திருமணத்திற்குச் சம்மதம் கிடைத்தது. அதன்விளைவாக, சென்னையில் நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலில், அர்ஜூன் மற்றும் தம்பி ராமையா முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கெடுத்தனர். நிகழ்வுக்குப் பின், இருதரப்பு வீட்டாரும் அமர்ந்து மனம்விட்டுப் பேசியுள்ளனர். 

அப்போது நடிகர் தம்பி ராமையா,  தனது வருங்கால மருமகள் ஐஸ்வர்யாவிடம் திருமணத்திற்குப் பின், நடிக்கவேண்டாம் எனக் கண்டிஷன் போட்டுள்ளார். அதற்கு, அவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால், ஐஸ்வர்யா அர்ஜூனின் ஆர்மி எனப்படும் அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்