தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ilaiyaraaja : ரஜினியின் கூலி படத்திற்கு சிக்கல்.. சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா!

Ilaiyaraaja : ரஜினியின் கூலி படத்திற்கு சிக்கல்.. சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா!

Divya Sekar HT Tamil
May 01, 2024 12:33 PM IST

Ilaiyaraaja Sent Notice : கூலி டீசரில் இளையராஜா இசையமைப்பில் ரஜினிகாந்த் நடித்த தங்கமகன் படத்தில் இடம்பெற்ற பாடலை அனிருத் பயன்படுத்தியிருப்பார். தற்போது இளையராஜ இந்த பாடலை பயன்படுத்தி இருப்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எதிராகநோட்டீஸ் அனுப்பிய இளையராஜா
சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எதிராகநோட்டீஸ் அனுப்பிய இளையராஜா

ட்ரெண்டிங் செய்திகள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் கூலி திரைப்படத்தின் டீசர் வெளியானது. அதில், இளையராஜா இசையமைப்பில் ரஜினிகாந்த் நடித்த தங்கமகன் படத்தில் இடம்பெற்ற பாடலை அனிருத் பயன்படுத்தியிருப்பார். தற்போது இளையராஜ இந்த பாடலை பயன்படுத்தி இருப்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இளையராஜா தான் இசையமைத்த பாடல்கள் தனக்கு தான் சொந்தம் என்றும்,அந்த பாடலை பாடியவர்கள் கூட அந்த பாடலை அனுமதி பெற்று தான் பாட வேண்டும், என்னுடைய அனுமதி இல்லாமல் மேடையில் பாடக்கூடாது என்றும் மற்ற படங்களில் பயன்படுத்தக் கூடாது என்றும் அதற்கு உரிய காப்புரிமை செலுத்தி விட்டு பயன்படுத்தலாம் என இளையராஜா கூறி வருகிறார்.

இதற்கு முன்னதாக மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் தனது 50 ஆண்டுகால இசைப் பயணத்தை பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு மேடை கச்சேரிகளை நடத்தி வந்தார். இவரின் கச்சேரியின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் ஒரு இசைக்குழு பயணித்து வருகிறது. 

இந்நிலையில் எஸ் பி பாலசுப்ரமணியம், பாடகர் சரண், பாடகி சித்ரா ஆகியோருக்கு இளையராஜா தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்ட்டது.  மேலும் இசை கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அந்த நோட்டீசில் இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவர் அவரது அனுமதி இல்லாமல் பயன்படுத்தக்கூடாது. அவரது அனுமதி பெற்றே பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இளையராஜாவின் பாடல்களை பாடவோ, இசை கச்சேரி நடத்தவோ கூடாது எனவும், அதை மீறி செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும் எனவும், மிகப்பெரிய அபராத தொகை சட்டப்படி தர வேண்டி இருக்கும் எனவும் எச்சரித்து அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தான் இளையராஜா தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கூலி திரைப்படத்தின் டீசரில் இளையராஜாவின் வா வா பக்கம் வா பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அப்பாடல் மற்றும் இசைக்கு முதல் உரிமையாளரான இளையராஜாவிடம் முறையாக எந்த அனுமதியும் பெறவில்லை என கூறப்பட்டுள்ளது. இது, காப்புரிமை சட்டம் 1957-ன் கீழ் குற்றம் என்றும் நோட்டீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 இது போன்ற செயல்களில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற “விக்ரம் விக்ரம்” பாடலுக்கும் தங்களிடம் அனுமதி பெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதே போன்று, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் வெளியான ‘பைட் கிளப்’ என்ற படத்திலும் “என் ஜோடி மஞ்ச குருவி” பாடலின் இசையையும் அனுமதியின்றி மறு உருவாக்கம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 சமீபத்தில் வெளியான கூலி படத்தின் டீசரில் இடம்பெற்ற வா வா பாக்கம் வா பாடலுக்கு  உரிய அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டும் அல்லது, டீசரில் இருந்து அந்த இசையை நீக்க வேண்டும் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யாத பட்சத்தில், சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாக இளையராஜா தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்