தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Shruti Haasan Latest Interview About How To Convince Lokesh Kanagaraj To Do Kamal Haasan Inimel Song

Lokesh Kanagaraj: ஸ்ருதிஹாசனுடன் அவ்வளவு நெருக்கம்! - ‘யாரும் காரி துப்பாத அளவுக்கு’.. - லோகேஷ் கனகராஜ்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 25, 2024 10:48 AM IST

ஆக்சன் படங்களுக்கு என்று சில டெம்ப்ளேட்கள் இருக்கின்றன. ஆகையால் அதன்படிதான் அதை செய்தாக வேண்டும். ஆனால், இனிமேல் பாடல் என்பது எனக்கு உண்மையில் எனக்கு ஆச்சரியம் தான். ஒரு நாள் எனக்கு கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்தது.

லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த புரமோவில் நடிகை ஸ்ருதி ஹாசனுடன் மிகவும் நெருக்கமாக நடித்து இருந்தார் லோகேஷ் கனகராஜ். இது விமர்சனங்களை பெற்ற நிலையில், அதற்கு லோகேஷ் கனகராஜ் பதில் கொடுத்திருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, “ என்னுடைய திரைப்படங்களில் காதலுக்கான இடம் கம்மியாக இருப்பதையும், நான் கதாநாயகிகளை கொன்று விடுவதையும் குறிப்பிட்டு, இவர் எப்படி இப்படியான ஒரு ரொமான்டிக் பாடலில் நடித்தார் என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது. 

ஆக்சன் படங்களுக்கு என்று சில டெம்ப்ளேட்கள் இருக்கின்றன. ஆகையால் அதன்படிதான் அதை செய்தாக வேண்டும். ஆனால், இனிமேல் பாடல் என்பது எனக்கு உண்மையில் எனக்கு ஆச்சரியம் தான். ஒரு நாள் எனக்கு கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. 

நான் அவர்கள் வேறு எதற்காகவோ அழைக்கிறார்கள் என்று நினைத்தேன். இதனையடுத்து அவர்கள் விஷயத்தை சொன்னார்கள். நான் ஸ்ருதிஹாசனை சந்தித்தேன். அவரை பார்த்த உடனேயே நான் சிரித்து விட்டேன்.

அதன் பின்னர் பாடலை கேட்டேன். கொஞ்சம், கொஞ்சமாக  ஏன் இதை முயற்சி செய்து பார்க்க கூடாது என்று தோன்றியது. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் கமல் ஹாசன் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ஏதாவது கேட்டு வந்தால், அதற்கு என்னால் நோ சொல்ல முடியாது.” என்று பேசினார். 

ஸ்ருதிஹாசன் பேசும் பொழுது, “நான் தொடர்ச்சியாக பேசிக் கொண்டே இருப்பேன். இவர் என்னை கவனித்துக் கொண்டே இருந்தார். கொஞ்சம் விட்டால் இவள் எரிச்சலை கிளப்பி விடுவாள் என்று ஓகே சொல்லிவிட்டார் என்று நினைக்கிறேன்” என்றார். 

இதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.இதுதான் கான்செப்ட் என்று அவர் புரிய வைத்தார். நான் நடிக்க வேண்டும் என்றெல்லாம் முயற்சி செய்து கூட பார்த்ததில்லை. நடிப்பை ஒரு சவாலாக ஏன் எடுத்து செய்யக்கூடாது என்ற சோனுக்குள்ளும் நான் என்றைக்கும் சென்றது கிடையாது. 

அவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பது குறித்தான ஸ்கிரிப்ட் புக் எனக்கு கொடுக்கப்பட்டது. நான் படித்தேன். பாடலின் இயக்குநர் துவாரக்கை  சந்தித்தேன். மொத்த குழுவையும் என்னை சந்திக்க வைத்தார்கள். 

தினசரியும் அந்த டைரக்ஷன் டீம் என்னை சந்தித்துக் கொண்டே இருந்தது. நான் மீண்டும் மீண்டும் அவர்களிடம் கேட்டது  ‘ஒய் மி’ என்பதுதான். ஷூட் செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்னர் கூட, நான் கான்ஃபிடன்ட்டாக இல்லை. 

அங்கே சென்று என்ன செய்யப் போகிறேன் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்த டீமுடன் நான் தினசரி சந்தித்த சந்திப்புகள், எனக்கு ஒரு விதமாக செளகரியமான நிலையை கொடுத்து, இந்த முடிவை எடுக்க வைத்தது. யாரும் காரி துப்பாத அளவிற்கு செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன்” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்