Aranmanai Kili: ‘ராசாவே உன்னை விட மாட்டேன்’ ராஜ்கிரணின் அரண்மனை கிளியை மறக்க முடியுமா? வெற்றிக்கு காரணமான இளையராஜா!
Aranmanai Kili: "ராசாவே உன்னை விட மாட்டேன்" என்ற பாடலுக்காக நடித்ததாகவும் ராஜ்கிரணின் கரடுமுரடான தோற்றத்தை கண்டு பயந்ததாகவும் கூறி இருக்கிறார். இன்னும் ஒரு நாயகியாக அஹானா குஸ்பூ போன்று இருந்ததை வைத்து கமிட் ஆனவர். குஸ்பூ வுக்கு பின்னணி குரல் கொடுத்த அனுராதா தான் அஹானாவுக்கும் குரல் கொடுத்தார்.
Aranmanai Kili: ராஜ்கிரணின் அரண்மனை கிளி கடந்த 1993 ஏப்ரல் 16 ல் வெளியாகி முப்பத்தியோரு ஆண்டுகள் கடந்தும் கூட தமிழ் ரசிகர்கள் மனதில் வைத்து கொண்டு இன்னும் கொண்டாடும் படம். ராஜ்கிரண் கதை எழுதி தானே தயாரித்து இயக்கி கதையின் நாயகனாக நடித்த படம். ராஜ்கிரண் ராசய்யா என்ற கதாபாத்திரத்தில் இயல்பாக வாழ்ந்திருக்கிறார். அவர்களோடு அஹானா பூங்கொடியாகவும், காயத்ரி செல்லம்மாவாகவும், வடிவேலு கத்தய்யாவாகவும், இளவரசி பூங்கொடியின் அம்மாவாகவும், சங்கிலிமுருகன் ராசய்யாவின் தந்தையாகவும், விஜயகுமாரி பிரேமி உள்ளிட்டோர் நடித்த படம். படத்துக்கு கிச்சாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தில் இரண்டு நாயகிகள் இருப்பார்கள். இதில் ஏழைப்பெண் செல்லம்மாவாக நடித்த காயத்ரி தேர்வே ஓரு சுவாரஸ்யமான விசயம். செம்பருத்தி என்ற படத்தில் இரண்டு தினங்களாக நடித்து ஒதுங்கி கொண்டவர் காயத்ரி. மும்பையில் இருந்த காயத்ரியை தொடர்பு கொண்டு கதையை சொல்லி இரண்டு நாயகிகளில் ஒரு கதாபாத்திரத்தை தேர்வு செய்ய கூறியுள்ளார்.
"ராசாவே உன்னை விட மாட்டேன்" என்ற பாடலுக்காக நடித்ததாகவும் ராஜ்கிரணின் கரடுமுரடான தோற்றத்தை கண்டு பயந்ததாகவும் கூறி இருக்கிறார். இன்னும் ஒரு நாயகியாக அஹானா குஸ்பூ போன்று இருந்ததை வைத்து கமிட் ஆனவர். குஸ்பூ வுக்கு பின்னணி குரல் கொடுத்த அனுராதா தான் அஹானாவுக்கும் குரல் கொடுத்தார்.
ஊரில் உள்ள ஒரு பணக்கார குடும்பத்தில் விசுவாசமாக வேலைபார்க்கும் பாத்திரத்தில் நாயகன் ராசய்யா. முதலாளி சொல்லை தட்டாதவர். அந்த வசதியான சொத்துக்கள் அனைத்துக்கும் உரிமையான பெண்தான் அஹானா என்ற பூங்கொடி. பூங்கோடிக்கோ தனது வீட்டில் கைகட்டி வேலை செய்யும் ராசய்யா மீதே காதல் பிறக்கிறது. அந்த பெண்ணின் மாமா பராமரிப்பில் தான் பூங்கொடி வாழ்கிறார். பூங்கொடி ராசய்யாவை காதலிப்பதாக கூறும் போது மாமாவுக்கு யோசனை பிறக்கிறது. அந்த பெண் பூங்கொடியின் பெற்றோரை அழித்து விட்டு காத்திருக்கும் மாமாவின் கதை தெரிந்த ஒரே ஆள் ராசய்யாவின் அம்மா மட்டுமே.
தனது பேச்சை கேட்டு அடங்கி கிடக்கும் ராசய்யாவுக்கு திருமணம் செய்து விட்டால் வழக்கம் போல் வாழ்க்கை ஓடும். எப்போதும் போல் எல்லா சொத்துக்களையும் நிர்வகிக்க முடியும். பூங்கொடி ஆசையை நிறைவேற்றியதாகவும் இருக்கும் என்று ஏற்று கொள்கிறார். தாயை தெய்வமாக மதிப்பவர்.
மறுபுறத்தில் அதே ஊரில் ஏழை பெண் செல்லம்மாவை கடத்தி சென்ற கும்பல் ஒன்றிடம் இருந்து மீட்டு கொண்டு வருவார் ராஜ்கிரண். செல்லம்மாவுக்கும் தன்னை காப்பாற்றிய ராசய்யா மேல் காதல் ஏற்படுகிறது. திருமணம் முடிந்த பின் செல்லம்மாவும் ராசய்யா இருவரையும் இணைத்து சந்தேகம் கூடி கொண்டே இருக்கும்.
இந்த படத்தின் பலமே இசையமைப்பாளர் இளையராஜா தான். அவர்கள் இசையில் அமைத்து தந்திருந்த ஏழு பாடல்களை வைத்தே திரைக்கதை வசனம் எழுதி படமாக எடுத்ததாக சொல்வார்கள். இரண்டு மணி நேரத்தில் இந்த ஏழு பாடல்களுக்கும் கம்போஸ் செய்ததாக திரைப்பட உலகில் ஒரு டாக் இருந்தது.
"அம்மன் கோவில்"
"அடி பூங்குயிலே'"
"என் தாயெனும் கோவில்|
"நட்டு வச்ச ரோஜா"
"ராமரா நினைக்கும்"
"ராசாவே உன்னை விட மாட்டேன்"
"ராத்திரியில் பாடும் பாடல்"
"வான்மதியே வான்மதியே ' என்ற அனைத்து பாடல்களும் அதிரிபுதிரியான ஹிட் அடித்த பாடல்கள்.
ஆரம்ப காலங்களில் வடிவேலுவை அறிமுகப்படுத்தி வலுவான கதாபாத்திரங்களை நம்பிக்கை வைத்து கொடுத்தவர் ராஜ்கிரண் என்று எல்லோருக்கும் தெரியும். இன்றைக்கு வைகைப்புயலாக நாம் அறியும் வடிவேலு அவர்களின் உடல் மொழியை நன்கறிந்தவராக தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் அவரை நன்றாக கதையோட்டத்தில் முழுமையாக பயன்படுத்தி மக்கள் மனதில் பதிய வைத்தார். வடிவேலு வாழ்க்கையில் அடித்தளம் அமைத்து கொடுத்த படம்.
எப்போதும் கடுமையான வார்த்தைகளால் ராஜ்கிரணை வறுத்தெடுக்கும் பொசசிவான கதாபாத்திரம் பூங்கொடிக்கு. இறுதியில் செல்லம்மாவுக்கு என்ன ஆனது. அவரின் தாய் என்ன ஆனார். பூங்கொடி புரிந்து கொண்டாரா என்பதை நோக்கி காட்சிகள் எல்லாம் உணர்வுபூர்வமாக இருக்கும். ராஜ்கிரணின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படங்களில் அரண்மனை கிளியும் ஒன்று.
டாபிக்ஸ்