தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thunivu: ‘மக்களுக்கான படம் துணிவு’ இயக்குனர் பொன்ராம் புகழாரம்!

Thunivu: ‘மக்களுக்கான படம் துணிவு’ இயக்குனர் பொன்ராம் புகழாரம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 17, 2023 12:08 PM IST

Director Ponram About Thunivu Movie: ‘இது மக்களுக்கான விழிப்புணர்வு படம்னு சொல்லலாம். வாழ்த்துக்கள்’ -இயக்குனர் பொன்ராம்.

துணிவு படத்தின் போஸ்டர் மற்றும் இயக்குனர் பொன்ராம்
துணிவு படத்தின் போஸ்டர் மற்றும் இயக்குனர் பொன்ராம்

ட்ரெண்டிங் செய்திகள்

துணிவு படத்தை பார்த்த பெரும்பாலானோர், அதில் அஜித் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தை புகழ்ந்து கொண்டாடி வருகின்றனர். வங்கிகள் செய்யும் மோசடியை தோலுரித்து காட்டும் திரைக்கதையும், அதை அஜித் மாதிரியான முன்னணி நட்சத்திரத்தை பயன்படுத்தி சொல்ல வைத்ததையும், வெகுவாக பாராட்டுகின்றனர்.

படம் வெளியான நாளிலிருந்து இருந்து இன்று வரை ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது துணிவு. இந்நிலையில் படத்தை பார்த்த பல பிரபலங்களும், துணிவு படம் பற்றிய தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமை ராஜா, எம்.ஜி.ஆர்., மகன், டிஎஸ்பி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம், துணிவு படத்தை பார்த்துவிட்டு, தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

துணிவு செம்ம 👌அஜித்குமார் சார் பெர்பாமென்ஸ் வேற லெவல்🥰.

H. Vinoth scam concept super👍.

இது மக்களுக்கான விழிப்புணர்வு படம்னு சொல்லலாம். வாழ்த்துக்கள்💐💐

என்று தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் இயக்குனர் பொன்ராம். படைப்பாளர்களின் வாழ்த்துக்களை தொடர்ந்து பெற்று வரும் துணிவு படம், அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படுகிறது. அதே நேரத்தில் ரசிகர்களின் போட்டி சண்டையில், ஒரு தரப்பு துணிவு படத்தை கலவையான விமர்சனத்தையும் அளித்து வருகிறது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்