தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jailer: ‘என்ன அனி இதெல்லாம்..?’ ஜெயிலர் Bgm ல் கிழிந்து போன பிரபல தியேட்டர் ஸ்கிரீன்!

Jailer: ‘என்ன அனி இதெல்லாம்..?’ ஜெயிலர் BGM ல் கிழிந்து போன பிரபல தியேட்டர் ஸ்கிரீன்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Aug 13, 2023 11:48 AM IST

Kasi Theatre: ‘திரை தீப்பிடுக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம், திரை சத்தத்தில் கிழிந்ததை இப்போது தான் பார்க்கிறோம் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்’

சென்னை காசி தியேட்டர் ஸ்கிரின் கிழிந்தது
சென்னை காசி தியேட்டர் ஸ்கிரின் கிழிந்தது

ட்ரெண்டிங் செய்திகள்

ஜெயிலர் படத்தில் ரஜினி, நெல்சன் என்பதைப் போலவே படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பங்களிப்பு பிரபலமாக பேசப்படுகிறது. அந்த வகையில், படம் வெளியாகும் முன்பே, படம் மீது எதிர்பார்ப்பை எகிற வைத்தவர் இசையமைப்பாளர் அனிருத்.

அவரின் இரு பாடல்கள் செம ஹிட்டாகி, படத்தின் மீது பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் படத்தின் பின்னணி இசை, படத்தை தூக்கி பிடிப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

உண்மையை சொல்ல வேண்டுமானால், பலரும் பின்னணியால் ஃவைப் ஆகி, தலைவர் ரசிகர்களாக மீண்டும் பூரித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் பிரபல தியேட்டரான காசியில், ஜெயிலர் படத்தின் போது, பின்னணி இசையின் சத்தம் தாங்க முடியாமல், தியேட்டர் ஸ்கிரின் கிழிந்து விழும் காட்சியை படத்தயாரிப்பாளரான ஜெயம் கோபி பகிர்ந்துள்ளார்.

சண்டைக் காட்சியில் ரஜினி அடித்து துவம்சம் செய்து கொண்டிருக்கும் போது, அதற்கான பின்னணியின் சத்தம் தாங்க முடியாமல், ஸ்கிரின் கிழந்து, இறுதியில் பாதி ஸ்கிரீன் கிழிந்து தொங்கும் அதிர்ச்சியான வீடியோ காட்சியை கோபி பகிர்ந்திருக்கிறார்.

மேலும் தன்னுடைய பதிவில், ‘ஸ்கிரீன் கிழிஞ்சி ஸ்பீக்கரே சரிஞ்சி கீழ விழுற அளவுக்கு BGM போட்டு இருக்கியே அனி’ என்று பதிவிட்டிருக்கிறார் கோபி. கோபியின் இந்த பதிவை, அனிருத் பகிர்ந்திருக்கிறார். 

திரை தீப்பிடுக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம், திரை சத்தத்தில் கிழிந்ததை இப்போது தான் பார்க்கிறோம் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்