Thadi Balaji Wife Arrest: நடிகர் தாடி பாலாஜியின் மனைவி கைது! - நடந்தது என்ன?
நடிகை தாடி பாலாஜியின் மனைவி நித்யா கைது செய்யப்பட்டுள்ளார்
நடிகை தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா ஆகியோரின் கணவன் மனைவி சண்டை விவகாரம் சமூகவலைதளங்களில் பேசு பொருளானது அனைவரும் அறிந்த விஷயமே; இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில் நித்யா சென்னை மாதவரம், சாஸ்திரி நகர், எக்ஸ்டென்ஷன் இரண்டாவது குறுக்கு சாலையில் வசித்து வருகிறார்.
இவர் வசித்து வரும் வீட்டிற்கு எதிரே ஓய்வு பெற்ற ஆசிரியரான மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், நித்யாவிற்கு இடையே அண்மைகாலமாகவே மோதல் போக்கு நிலவி வந்ததாகத் தெரிகிறது. பலமுறை இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த மோதல் போக்கு உச்சம் தொட்ட நிலையில், நித்யா மணியின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மணி, நித்யா மீது மாதவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரோடு நித்யா மணியின் காரை உடைத்த சிசிடிவி வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது. அந்தப்புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.
இந்த விசாரணாயில் தாடி பாலாஜியின் மனைவி நித்யா கார் கண்ணாடியை உடைத்தது உறுதியானது. இந்த நிலையில் நித்யா மீது சட்டப்பிரிவு IPC 427 (பிறர் சொத்துக்களை சேதப்படுத்துதல்) கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர். இருப்பினும் இது பிணையில் வெளிவரக்கூடிய வழக்கு என்பதால், அவரை காவல்நிலைய பிணையிலேயே விடுவித்திருக்கிறார்கள்.
டாபிக்ஸ்