தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Premi Mahendran: ‘என்னங்க பிரேமி வந்திருக்கேன்..’ ஒரு நொடி கண் விழித்த மகேந்திரன்! - மரணப்படுக்கையில் மலர்ந்த நினைவுகள்!

Premi Mahendran: ‘என்னங்க பிரேமி வந்திருக்கேன்..’ ஒரு நொடி கண் விழித்த மகேந்திரன்! - மரணப்படுக்கையில் மலர்ந்த நினைவுகள்!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 20, 2024 07:39 AM IST

அவர்கள் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர். அந்த ஐந்து பேருக்குமே என்னை மிகவும் பிடிக்கும். எனக்கு அவர்கள் கடிதம் எழுதுவார்கள். அடிக்கடி வீட்டிற்கு வா என்று அழைப்பார்கள்.

மகேந்திரன் மனைவி பிரேமி!
மகேந்திரன் மனைவி பிரேமி!

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து பெட்டர் டுடே சேனலுக்கு அவர் பேசும் போது, “ எனக்கும், மகேந்திரனின் அம்மாவிற்கும் நல்ல உறவு இருந்தது. அவருடைய தம்பியின் திருமணத்தின்போது நான், என்னுடைய தங்கை, குழந்தை என எல்லோருமே சென்று இருந்தோம். என்னுடைய மகனை அவர்கள் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்.

அவர்கள் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர். அந்த ஐந்து பேருக்குமே என்னை மிகவும் பிடிக்கும். எனக்கு அவர்கள் கடிதம் எழுதுவார்கள். அடிக்கடி வீட்டிற்கு வா என்று அழைப்பார்கள். ஆனால் மகேந்திரன் சாருக்குத்தான் நேரம் இருக்காது. இருப்பினும், நாங்கள் நான்கு, ஐந்து முறை அவர்கள் வீட்டிற்கு ஒன்றாக சென்று இருப்போம்.

மகேந்திரனுடைய மகன்களுக்கு மகன், மகள்கள் இருக்கின்றனர். அதில் ஒரு மகன் என்னை தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் அதன் பின்னர் என்ன ஆனது என்று தெரியவில்லை. அப்படியே அதை நிறுத்திவிட்டார். அவர் அமெரிக்காவில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். 

மகேந்திரனுடைய அம்மாவின் மிகப்பெரிய போட்டோ ஒன்று என்னிடம் இருக்கிறது. அதனை நான் பூஜை ரூமில் வைத்து வழிபட்டுக் கொண்டிருக்கிறேன். 

ஒவ்வொரு வருடமும், மகேந்திரனுடைய இறந்த நாளன்று அவருடைய கல்லறைக்குச் சென்று, மாலையிட்டு, ஏழைகளுக்கு சாப்பாடு கொடுத்து, வழிபட்டு வருவோம். 

நாங்கள் பிரிந்த அந்த ஏழு, எட்டு வருடங்களில், நாங்கள் சந்தித்துக் கொள்ளவே இல்லை. ஒரு முறை அவர் என்னை சந்திக்க முயற்சி செய்தார். ஆனால் நான்தான் யாராவது ஒரு பக்கம் நன்றாக இருந்தால் போதும் என்று அவரை சந்திக்க விரும்பவில்லை என்று சொல்லிவிட்டேன்.

ஒரு கட்டத்தில் அவர் திரையில் நடிக்க ஆரம்பித்தார். அவர் நடித்த படத்தை நாங்கள் தியேட்டருக்கு சென்று பார்த்தோம். என்னுடைய பேரனுக்கு அது மிகவும் பிடித்து விட்டது.

கடைசியாக, நான் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது குடும்பத்தோடு சென்று பார்த்தேன். அப்போது  அவரிடம் நான் பிரேமி வந்திருக்கிறேன் என்று சொன்னேன். என்னுடைய மகன் அப்பா, மகன் வந்திருக்கிறேன் என்று சொன்னான் உடனடியாக அவர் கண்ணை விழித்து, ஒரு நொடி பார்த்தார்; பின்னர் மூடிக்கொண்டார். அடுத்த நாள் அவர் இறந்து விட்டார்

அவரின் படைப்புகளுக்கு இன்னும் நிறைய அங்கீகாரங்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்கவில்லை. அவர் சினிமாவில் இறங்கி தொடர்ச்சியாக படங்களை ஹிட்டு கொடுத்தவுடன், பல இயக்குனர்கள் அவரைப் பார்த்து பயந்தார்கள்.” என்று பேசினார். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்