தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ht Special :எடைக்கு எடை மஞ்சள் கொடுத்த யோகிபாபு;இராதாபுரத்தில் சிறப்பு தரிசனம்!

HT Special :எடைக்கு எடை மஞ்சள் கொடுத்த யோகிபாபு;இராதாபுரத்தில் சிறப்பு தரிசனம்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 24, 2023 06:54 AM IST

இராதாபுரம் அருள்மிகு வரகுணபாண்டீஸ்வரர் மற்றும் நித்திய கல்யாணி அம்பாள் திருக்கோயிலில் நடிகர் யோகிபாபு சிறப்புதரிசனம் செய்தார்

 இராதாபுரத்தில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்
இராதாபுரத்தில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தக்கோயிலில் மிகவும் சிறப்பு வாய்ந்தது மஞ்சள். திருமணமாகாத இளம் ஆண்கள், பெண்கள் ஆகியோருக்கு திருமணம் தள்ளிப்போகும் பட்சத்தில், அம்பாளுக்கு அவர்கள் மஞ்சளை காணிக்கையாக அளிக்கும் போது அவர்கள் திருமண தடை நீங்கி சிறப்பாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

தேரோட்டம்
தேரோட்டம் (Thanks Ganesh Payyanur )

ராதாபுரம் கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களும் தங்கள் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் யாவற்றையும் கோயிலுக்கு மஞ்சள் வாங்கி கொடுத்த பின்னரே தொடங்குவர். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பழமையான திருக்கோயிலுக்கு நேற்றைய தினம் பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு வருகை தந்திருந்தார்.

யோகிபாபு
யோகிபாபு

அனைத்து பக்தர்களை போலவும் அம்பாளுக்கு மஞ்சள் வாங்கி வந்த அவர், அதனை அம்பாளுக்கு படைத்து நெஞ்சுருக வேண்டினார். இவரை பார்த்த கிராம மக்கள் யோகிபாபுவுடன் போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டனர். அவர்களுடன் வாஞ்சையோடு போட்டோவும் எடுத்துக்கொண்டார் யோகிபாபு.

யோகிபாபு
யோகிபாபு

யோகிபாபு வந்திருப்பதை தெரிந்து கொண்ட ஊர் பெரியவர்கள் வருகிற பிப்ரவரி 9 அன்று இராதாபுரம் தெற்கு தெருவில் அமைந்துள்ள பெரிய கோயில் புலிமாடசாமி திருக்கோயிலின் கொடை விழாவிற்கு வரும்படி யோகிபாபுவுக்கு அழைப்பிதழ் வைத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட யோகிபாபு நிச்சயம் வருவதாக உறுதியளித்தார்.

ஊர்மக்களுடன் யோகிபாபு
ஊர்மக்களுடன் யோகிபாபு

இதனைத்தொடர்ந்து நாம் கோயில் பூசாரியான சேகர் சாமியை தொடர்பு கொண்டு பேசினோம். அவர் பேசும் போது, “கடந்த 2 மாதத்திற்கு முன்னதாக ஒரு வியாழக்கிழமை அன்று யோகிபாபு கோயிலுக்கு வருகை தந்தார். அப்போது அவர் தற்போது என்ன எடை இருக்கிறாரோ, அதே அளவிலான மஞ்சளை கோயிலுக்கு காணிக்கையாக கொடுத்தார். 

இந்த கோயிலில் மஞ்சள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மக்கள் காணிக்கையாக கொடுக்கும் மஞ்சள் பிரசாதத்திற்கும், அபிஷேகத்திற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பல ஆண்டுகளாக மக்கள் கொடுத்த காணிக்கையான மஞ்சள், இன்றளவும் கெடாமல் இருக்கிறது. இந்த சிறப்பை யோகிபாபுடன் சொன்ன உடன்தான் அவர் அதனை செய்தார். 

இந்த முறை வந்த போது, ஒரு கிலோ மஞ்சளை அம்பாள் பாதத்திலும், ஒரு கிலோ மஞ்சளை இடித்தும் காணிக்கையாக கொடுத்தார். கல்யாணி அம்பாள்தான் இங்கு அவருக்கு  மிகவும் பிடித்த தெய்வம். கால பைரவர் முன்பு நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தார். நேற்று எங்கள் ஊருக்கு அருகில் உள்ள விஜயாபதி விஸ்வாமித்திரர் கோயிலுக்கு சென்றும் வழிபட்டு இருக்கிறார். அவரை பார்த்த மக்கள் அவருடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டனர். அவரும் எடுத்துக்கொண்டார். குறிப்பாக என்னுடைய மகள் அவரிடம் பேசிக்கொண்டிருந்த போதே.. ஆமாம் நீங்கள் இந்த முடியைத்தான் வெட்டினால்தான் என்ன? என்று கேட்க அதைக்கேட்ட அவர் சிரித்தார். இறுதியாக அனைவரிடமும் இருந்து விடைபெற்றுக்கொண்டார்” என்று பேசினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்