தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajini : 54 வருட அரசியல் பயணம்.. பல பதவிகள்..தற்போது முதல்வர் - ரஜினி புகழாரம்!

Rajini : 54 வருட அரசியல் பயணம்.. பல பதவிகள்..தற்போது முதல்வர் - ரஜினி புகழாரம்!

Divya Sekar HT Tamil
Mar 11, 2023 12:12 PM IST

'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ வரலாற்று புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் பார்வையிட்டார்.

புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் பார்வையிட்டார்
புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் பார்வையிட்டார்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த புகைப்படக் கண்காட்சியை பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வந்து பார்வையிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது இந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டுள்ளார். அவருடன் நடிகர் யோகிபாபுவும் கலந்து கொண்டு பார்வையிட்டார்.

கண்காட்சியை பார்த்துவிட்டு பின்பு நடிகர் ரஜினி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.அப்போது பேசிய அவர், "ரொம்ப நாளாக அமைச்சர் சேகர் பாபு அழைத்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்பில் இருந்ததால் கண்டிப்பாக பின்பு வருகிறேன் என சொன்னேன். இந்த கண்காட்சியை ரொம்ப நன்றாக வடிவமைத்துள்ளார்.

புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் பார்வையிட்டார்
புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் பார்வையிட்டார்

என்னுடைய நண்பர் முதல்வரின் வாழ்க்கை பயணம் மற்றும் அரசியல் பயணம் இரண்டும் ஒன்றுதான். கிட்டத்தட்ட 54 வருட அரசியல் பயணம். படிப்படியாக தனது வாழ்க்கையில் உயர்ந்து வந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

படிப்படியாக முன்னேறி பல பதவிகளை வகித்து தற்போது முதல்வராக இருக்கிறார். இது அவருடைய உழைப்புக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம். அவர் நீண்ட ஆரோக்கியத்துடம் இருக்க வேண்டும்," என்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்