தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  33 Years Of Thangaikku Oru Thalattu: ஒரே நாளில் வெளியாகி ஹிட்டடித்த இரண்டு அர்ஜுன் படங்கள்!

33 Years of Thangaikku Oru Thalattu: ஒரே நாளில் வெளியாகி ஹிட்டடித்த இரண்டு அர்ஜுன் படங்கள்!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 23, 2023 05:50 AM IST

தங்கை சென்டிமெண்ட், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் என அனைத்து அம்சங்களும் கலந்த கலவையான படமாக வெளியாகி அர்ஜுன் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக தங்கைக்கு ஒரு தாலாட்டு உள்ளது.

தங்கைக்கு ஒரு தாலாட்டு படத்தில் அர்ஜுன்  - சீதா
தங்கைக்கு ஒரு தாலாட்டு படத்தில் அர்ஜுன் - சீதா

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் கேஎஸ் மாதங்கன் என்பவர் இயக்கத்தில் தங்கை சென்டிமெண்ட், ஆக்‌ஷன், காதல், சஸ்பென்ஸ் நிறைந்த கதையம்சத்தில் உருவான படம் தான் தங்கைக்கு ஒரு தாலாட்டு. படத்தில் அர்ஜுன் இரட்டை வேடங்களில் தோன்றியிருப்பார். ஹீரோயினாக சீதா நடித்திருப்பார்.

தந்தை, தங்கையை கொலை செய்திருக்கும் வில்லனை பழிவாங்கும் வழக்கமான கதையாக இந்த படம் இருந்தாலும் அடுத்தடுத்த திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை மூலம் ரசிக்க வைக்கும் விதமாக அமைந்திருக்கும். அண்ணன், தம்பி என இரட்டை வேடங்களில் அர்ஜுன் சிறப்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். போலீசாக வரும் கதாபாத்திரத்தில் மிடுக்கான தோன்றியிருப்பார்.

1990இல் வெளியான இந்தப் படம் அர்ஜுன், ஹீரோயின் சீதா ஆகியோரின் சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது. பார்த்திபனை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு சீதா இந்த படத்தில் நடித்திருந்தார்.

அர்ஜுனுக்கு இந்தப் படம் வெளியான அதே நாளில் அவர் நடித்த மற்றொரு படமான ஆத்தா நான் பாஸ் ஆகிட்டேன் படமும் வெளியானது. இந்த இரு படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அர்ஜுனுக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.

தங்கைக்கு ஒரு தாலாட்டு படத்தில் சங்கர் கணேஷ் இசையில் அனைத்து பாடல்களும் அந்த காலகட்டத்தில் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. இந்த படத்தின் ஹிட்டுக்கு பிறகு அர்ஜுன் தனியாக திரைக்கதை எழுதி சேவகன் என்ற படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார்.

அர்ஜுன் சினிமா கேரியரில் அவருக்கு ஹிட் கொடுத்த படங்களில் ஒன்றாக இருந்து வரும் தங்கைக்கு ஒரு தாலாட்டு வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்