Aavesham OTT: ரூ.100 கோடி வசூல் செய்தும் ஒரே மாதத்தில் ஓடிடிக்கு வரும் ஃபஹத் ஃபாசிலின் ஆவேஷம்!
Aavesham OTT: ஆவேஷம் திரைப்படம் அமேசான் ஃபிரைமில் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. அவேஷம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரமே வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ஆவேஷம்
ஃபஹத் ஃபாசில் நடித்த மலையாள திரைப்படம் ஆவேஷம் திரையரங்குகளில் வெளியான ஒரு மாதத்தில் ஓடிடிக்கு வருகிறது.
ஆவேஷம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதத்திற்குள் ஓடிடியில் வெளியாகி வெற்றி பெறவுள்ளது. இந்த கேங்க்ஸ்டர் படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் ஃபிரைம் ஓடிடி நிறுவனம் பெற்று உள்ளது. இந்த மலையாளப் படம் மே 9 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆவேஷம் திரைப்படம் அமேசான் ஃபிரைமில் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. அவேஷம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரமே வெளியாகும் என்று கூறப்படுகிறது.