தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Premalatha Vijayakanth: ’திமுகவினர் அனைவரும் கஞ்சா கடத்தும் ரவுடிகள்!’ ஈபிஎஸ் முன் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!

Premalatha Vijayakanth: ’திமுகவினர் அனைவரும் கஞ்சா கடத்தும் ரவுடிகள்!’ ஈபிஎஸ் முன் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!

Kathiravan V HT Tamil
Mar 24, 2024 07:02 PM IST

”அண்ணன் எடப்பாடியார் பொதுச்செயலாளர் ஆன பிறகு அம்மா இல்லாமல் அவர் சந்திக்கும் முதல் தேர்தல், கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு நான் சந்திக்கும் முதல் தேர்தல் இது. இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை சாதித்துக் காட்டுவோம்”

திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

ட்ரெண்டிங் செய்திகள்

இன்றைக்கு நடப்பது பொதுக்கூட்டமா? அல்லது மாநாடா என்று சொல்லும் அளவுக்கு மாபெரும் மாநாடு உள்ளது. திருச்சி என்றாலே திருப்புமுனைகளை ஏற்படுத்த கூடிய மாவட்டமாக உள்ளது. திருச்சியில் தேமுதிக மகளிர் மாநாடு நடந்த போது மலைக்கோட்டை மஞ்சள் கோட்டையாக மாறியது.

கேப்டன் மறைவுக்கு பிறகு நான் பங்கேற்கும் பொது நிகழ்ச்சி இதுதான். அவர் இல்லாமல் ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்பேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை.

புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி, புரட்சிக் கலைஞர் ஆகிய மூன்று பேருமே திரை உலகில் இருந்து அரசியலுக்கு வந்தவர். இவர்கள் மூவருமே மக்களால் ஈர்க்கப்பட்ட தலைவர்கள், அவர்கள் மறைவும் டிசம்பர் மாதத்திலேயே அமைந்துள்ளது.

அண்ணன் எடப்பாடியார் பொதுச்செயலாளர் ஆன பிறகு அம்மா இல்லாமல் அவர் சந்திக்கும் முதல் தேர்தல், கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு நான் சந்திக்கும் முதல் தேர்தல் இது. இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை சாதித்துக் காட்டுவோம்.

மாற்றுக் கட்சியில் உள்ளவர்கள் ரவுடிசம், சட்ட ஒழுங்கு சீர்கேட்டை ஏற்படுத்தி நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த கூட்டம் 2021ஆம் ஆண்டிலேயே அமைந்து அண்ணன் எடப்பாடியார் ஆட்சி தொடர்ந்து இருக்க வேண்டியது. ஆனால் கொஞ்சம் காலதாமதம் ஆகிவிட்டது.

2021இல் கிடைக்க வேண்டிய வெற்றியை 2026இல் தேமுதிக கூட்டணியில் மீண்டும் அண்ணன் எடப்பாடியார் பெறுவார்.

இரண்டுநாள் வரைக்கும் கூட்டணியில் இருக்கின்றோம், இருக்கின்றோம் என்று நாடகம் நடத்தியவர்கள் வேண்டியது கிடைத்த உடன் துண்டைக்கானோம் துணியை காணோம் என்று சொல்லி வேறு கூடாரத்திற்கு சென்றுவிட்டார்கள்.

கேப்டன் வளர்த்த கட்சி நியாயத்திற்கும், தர்மத்திற்கும்தான் துணைநிற்போமே ஒழிய ரவுடிசத்திற்கும், கொலை கொள்ளைக்கும் துணை நிற்கமாட்டோம்.

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தோம் என்று சொல்லும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எங்கு பார்த்தாலும் மணல் கொள்ளை, கஞ்சா விற்பனை தலைவிரித்து ஆடிக் கொண்டு இருக்கிறது.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய தலைக்குணிவை ஏற்படுத்தி உள்ளது. இன்றைக்கு திமுகவில் உள்ள அத்தனை பேருமே கஞ்சா கடத்தும் ரவுடிகளாகத்தான் உள்ளார்கள்.

யோக்கியன் வரான் சொம்பு எடுத்து உள்ளவை என்று சொல்லும் பழமொழிக்கு ஏற்ப தன்னை யோக்கியராக காட்டிக் கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கஞ்சா கடத்தும் ரவுடிகளை சிறையில் அடைக்க தயாரா?

எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறைசொல்லும் திம்குக அரசே அதிமுக அரசை கொஞ்சம் நினைத்து பாருங்கள். கொரோனா காலந்த்தில் மத்திய அரசையே சார்ந்து வாழாமல் ஈபிஎஸ் சொந்த நிதியில் சிறப்பான திட்டத்தை ஏற்படுத்தி தந்தார். 

மழைநீர் வடிக்கால் பணிகள் 10 சதவீதம் கூட முடியாமல் உள்ளது. ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு தருவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த முதல்வர் தற்போது தகுதி வாய்ந்த பெண்கள் என்று சொல்கிறார்கள். தகுதி வாஅய்ந்த பெண்கள் இல்லை என்று சொன்னால் தகுந்தி வாய்ந்த முதல்வர் நீங்கள் இல்லை என்று பெண்கள் சொல்லக்கூடிய நேரம் இது. 

பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம், டீசல் விலையை குறைப்போம் என்று நிறைவேற்றவே முடியாத வாக்குறுதிகளை முதலமைச்சர் அளித்துள்ளார். 

வருஷத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் கொடுக்கும் நீங்கள் 85 ஆயிரம் ரூபாயை உங்கள் கஜானாவுக்கு திருப்பிவிட்டுக் கொள்கிறீர்கள். 

மத்திய அரசு சிஏஏ என்ற சட்டத்தை அமல்படுத்த உள்ளது. இஸ்லாமியர்களுக்கு உற்ற தோழனாக இந்த கூட்டணி இருக்கும். சிஏஏ சட்டம் எப்படி கொண்டுவரப்படுகிறது என்பதை பாஜக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 

விஞ்ஞானா ஊழல் செய்வதில் கலைஞரை போல் கில்லாடியை யாரும் பார்க்க முடியாது. சர்க்கரை மூட்டையை எறும்பு தின்றுவிட்டது என்றும், கோணி மூட்டைகளை கரையான் அறித்துவிட்டது என்றும் கலைஞர் சொன்னார் என பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார். 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், மக்களவைத் தேர்தல்கள், அதன் முடிவுகள் குறித்த அனைத்து செய்திகளையும் இந்தப்பிரிவில் பார்க்கலாம்.