Annamalai: ’19 தொகுதிகளில் பாஜக போட்டி! ஆனால் ஒரு தொகுதியில்தான் கவனம்!’ அண்ணாமலையை மறைமுகமாக சாடும் மாரிதாஸ்!
”ஒரே ஒரு தொகுதி மட்டும் தான் முக்கியம்!" என்ற ரீதியில் promotion செல்வது, அந்த ஒரு தொகுதிக்கு மட்டுமே அதீத முக்கியதுவம் கொடுப்பது திமுகவில் உதயநிதிக்கு கூட நடக்காது ஒன்று!”

தமிழ்நாட்டில் 19 நாடாளுமன்றத் தொகுதிகளில் நேரடியாக போட்டியிடும் பாஜக ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் கவனம் செலுத்துவதாக பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது. மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
தமிழக தேர்தல் களத்தில் பாஜக!
தமிழ்நாட்டை பொறுத்தவரை 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு திமுக, அதிமுக கட்சிகளுக்கு போட்டியாக பாஜகவும் தனியாக கூட்டணிகளை அமைத்து போட்டியிடுகிறது.
