தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Tada Periyasamy: பாஜகவுக்கு பெரிய சேதாரம்! போட்டி திமுகவுக்கும் அதிமுகவுக்கும்தான்! போட்டு உடைத்த மாரிதாஸ்!

Tada Periyasamy: பாஜகவுக்கு பெரிய சேதாரம்! போட்டி திமுகவுக்கும் அதிமுகவுக்கும்தான்! போட்டு உடைத்த மாரிதாஸ்!

Kathiravan V HT Tamil
Mar 30, 2024 03:46 PM IST

”பாஜகவில் இருந்து யாரோ செல்கிறார்கள் எனில் பெரிய செய்தி அல்ல. ஆனால் அக்கட்சியின் மூத்த தலைவரும் , பட்டியலின மக்களின் முக்கிய முகமாக இருந்த மாநில தலைவர் தடா பெரியசாமி போன்ற மதிக்கத் தக்க மனிதர்கள் கட்சியை விட்டுச் செல்கிறார்கள் எனில் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய சேதாரம் இது”

பாஜகவின் தடா பெரியசாமி அதிமுகவில் இணைந்தது குறித்து மாரிதாஸ் ட்வீட்
பாஜகவின் தடா பெரியசாமி அதிமுகவில் இணைந்தது குறித்து மாரிதாஸ் ட்வீட்

ட்ரெண்டிங் செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று கடைசிநாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தமிழக பாஜகவின் மாநில பட்டியல் அணி தலைவராக இருந்த தடா பெரியசாமி, தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

இன்றைய தினம் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து அக்கட்சித் தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்ட நிலையில், தடா பெரியசாமி அதிமுகவில் இணைந்தது பேசுபொருள் ஆகி உள்ளது. 

விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட களப்பணி செய்து வந்த நிலையில் தொகுதிக்கு தொடர்பு இல்லாத வேலூரை சேர்ந்த கார்த்தியாயினி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு தடா பெரிய சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே கார்த்தியாயினியை நிறுத்தி பாஜக இந்த வேலையை செய்து வருவதாக தடா பெரியசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய தடா பெரியசாமி, எல்.முருகனை தவிர வேறு தலித்தே கட்சியில் இல்லையா மாநிலத் தலைவர் அண்ணமலை, எல்.முருகன், கேசவவிநாயகம்தான் கட்சி என்பது போல் உருவாகி கட்சியை குட்டிச்சுவர் ஆக்கிவிட்டனர், தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துவிட்டது என்பது பிம்பம். கட்சியில் பெரிய வளர்ச்சியெல்லாம் கிடையாது, கோவையில் அண்ணாமலை தோற்பார், தமிழ்நாடு முழுவதும் பாஜக தோற்கும்.

அண்ணமலை கட்சியில் யாரையும் கலந்து ஆலோசிப்பது இல்லை, தன்னிச்சையாக அவர் செயல்படுகிறார். தமிழக பாஜகவில் பட்டியல் சமூகத்திற்கு அங்கீகாரம் இல்லை. அண்ணாமலை எங்களை மதிக்கவில்லை. எங்கள் உழைப்பிற்கு மரியாதை இல்லை என கூறி இருந்தார்.

கவனிக்கப்பட வேண்டிய சேதாரம்!

தடா பெரியசாமி பாஜகவில் இருந்து விலகியது தொடர்பாக ட்வீட் செய்துள்ள பாஜக ஆதரவாளர் மாரிதாஸ், தமிழக பாஜகவில் இருந்து யாரோ செல்கிறார்கள் எனில் பெரிய செய்தி அல்ல. ஆனால் அக்கட்சியின் மூத்த தலைவரும் , பட்டியலின மக்களின் முக்கிய முகமாக இருந்த மாநில தலைவர் தடா பெரியசாமி போன்ற மதிக்கத் தக்க மனிதர்கள் கட்சியை விட்டுச் செல்கிறார்கள் எனில் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய சேதாரம் இது.

அதிமுக தலைமையில் தொடர் நகர்வுகள் களத்தைத் தீவிரமாக மாற்றி வருகிறது. அந்த வகையில் அதிமுக தன் அடையாளத்தைக் களத்தில் இழக்காமல் மீள்வது அக்கட்சிக்கு முக்கிய நல்ல செய்தி. தன் கட்டமைப்பு பலத்தை மீண்டும் காட்டுகிறது அதிமுக. இதனால் களம் திமுக vs அதிமுக என மெல்ல தீவிரமடைகிறது பல தொகுதிகளில் என மாரிதாஸ் ட்வீட் செய்துள்ளர். 

WhatsApp channel