தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Dmk: ’சொத்து மதிப்பில் பாஜக காங்கிரஸை விஞ்சிய திமுக வேட்பாளர்கள்!’ டாப் 3 பணக்கார வேட்பாளர்கள் யார் தெரியுமா?

DMK: ’சொத்து மதிப்பில் பாஜக காங்கிரஸை விஞ்சிய திமுக வேட்பாளர்கள்!’ டாப் 3 பணக்கார வேட்பாளர்கள் யார் தெரியுமா?

Kathiravan V HT Tamil
Apr 08, 2024 05:18 PM IST

”அதிமுகவின் ஆற்றல் அசோக் குமார் 662 கோடி சொத்துக்களுடன் இரண்டாம் இடத்திலும், இந்திய கல்வி முன்னேற்றக் கழகம் சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தேவநாதன் யாதவ் 304 கோடி ரூபாய் உடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்”

முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது
முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது

ட்ரெண்டிங் செய்திகள்

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலின் முதல் கட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் பதினாறு சதவீதம் பேர் (1,618 பேரில் 252) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என ஆய்வு நிறுவனமான ஏடிஆர் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. 

முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து ஆய்வு 

Association for Democratic Reforms எனப்படும் ஏடிஆர் நிறுவனம் நடத்திய ஆய்வில் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும், 1,625 வேட்பாளர்களில் 1,618 பேரின் சுய சத்தியப் பிரமாணப் பத்திரங்களை பகுப்பாய்வு செய்தது.

இந்தியாவில் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் தொடங்குகிறது.

நாடு முழுவதும் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

16 சதவீத வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு!

கிரிமினல் வழக்குகள் உள்ள 252 (16%) வேட்பாளர்களில், 161 (10%) வேட்பாளர்கள் மீது கடுமையான கிரிமினல் வழக்குகளும், ஏழு பேர் கொலை தொடர்பான வழக்குகளும், 18 வேட்பாளர்கள் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளும், 35 வேட்பாளர்கள் தங்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சு தொடர்பான வழக்குகளும் இருப்பதாக அறிவித்துள்ளனர்.

பாஜகவின் 77 வேட்பாளர்களில் 28 பேரும், காங்கிரஸ் வேட்பாளர்களில் 56 பேரில் 19 பேரும் தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் நான்கு வேட்பாளர்களில் நான்கு பேர் மீது வழக்குகள் உள்ளன. திமுக வேட்பாளர்கள் மீது 59 சதவீதமும், சமாஜ்வாதி வேட்பாளர்கள் மீது 43 சதவீதமும், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது 40 சதவீதமும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் மீது 13 சதவீதமும் குற்றவழக்குகள் உள்ளதாக ஏடிஆர் நிறுவனம் கூறி உள்ளது. 

மொத்தமுள்ள 102 தொகுதிகளில் 42 தொகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதியில் போட்டியிடும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகளை அறிவித்தால் அத்தகைய எச்சரிக்கை ஒலிக்கப்படுகிறது.

450 வேட்பாளர்கள் கோட்டீஸ்வரர்கள்!

பகுப்பாய்வு செய்யப்பட்ட 1,618 வேட்பாளர்களில் 450 பேர் (28%)  ஒரு கோடி ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பு கொண்ட சொத்துக்களைக் கொண்டுள்ளனர். 

2024 மக்களவைத் தேர்தலின் முதல் கட்டத்தில் வாக்குப்பதிவில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களில் 90 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் ஆவர், காங்கிரஸ் கட்சி நிறுத்தி உள்ள வேட்பாளர்களில் 88% அதாவது 49 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள் ஆவார். 

10 வேட்பாளர்களின் சொத்து மதிப்பு பூஜ்ஜியம்!

இதற்கிடையில், முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் தங்கள் பிரமாணப் பத்திரங்களில் தங்களுக்கு சொத்து ஏதும் இல்லை என்று அறிவித்துள்ளனர். அதே நேரத்தில் முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் சராசரி சொத்து மதிப்பு ரூபாய் 4.51 கோடியாக உள்ளது. 

பாஜக, காங்கிரஸை விஞ்சிய திமுக!

இதில் பாஜக வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.22.37 கோடி ஆகவும், 56 காங்கிரஸ் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.27.79 கோடியாகவும் உள்ளது. 

உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் 22 திமுக வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 31.22 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது, 

4 ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.8.93 கோடியாகவும், சமாஜ்வாதி வேட்பாளர்கள் 7 வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.6.67 கோடி, ஏஐடிசி வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.3.72 கோடியாகவும் உள்ளது. 

அதிக சொத்துக்களை கொட வேட்பாளர்கள் யார்?

அதிக சொத்துக்களைக் கொண்ட முதல் மூன்று வேட்பாளர்கள் பட்டியலில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் நகுல் நாத் 716 கோடி ரூபாக்கும் கூடுதலான சொத்துக்களுடன் முதல் இடத்தில் உள்ளார். 

அதிமுகவின் ஆற்றல் அசோக் குமார் 662 கோடி சொத்துக்களுடன் இரண்டாம் இடத்திலும், இந்திய கல்வி முன்னேற்றக் கழகம் சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தேவநாதன் யாதவ் 304 கோடி ரூபாய் உடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 

WhatsApp channel