தமிழ் செய்திகள்  /  தேர்தல்கள்  /  Dindigul: திண்டுக்கல்லில் பழுக்கும் மாம்பழம் - கருத்துக்கணிப்பில் தகவல் - திராவிடக் கூட்டணிகள் அதிர்ச்சி!

Dindigul: திண்டுக்கல்லில் பழுக்கும் மாம்பழம் - கருத்துக்கணிப்பில் தகவல் - திராவிடக் கூட்டணிகள் அதிர்ச்சி!

Marimuthu M HT Tamil
Apr 16, 2024 11:46 PM IST

Dindigul: தென் மாவட்டங்களில் புதிதாக பாமகவுக்கு ஆதரவாக வெளியான கருத்துக்கணிப்பால் முக்கியப்புள்ளிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திண்டுக்கல்லில் பழுக்கும் மாம்பழம் - கருத்துக்கணிப்பில் தகவல் - திராவிடக் கூட்டணிகள் அதிர்ச்சி!
திண்டுக்கல்லில் பழுக்கும் மாம்பழம் - கருத்துக்கணிப்பில் தகவல் - திராவிடக் கூட்டணிகள் அதிர்ச்சி!

ட்ரெண்டிங் செய்திகள்

 அந்த வகையில் கொங்கு பகுதியிலும் தென்மாவட்டப் பகுதியிலும் அங்கம் வகிக்கும் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு சுவாரஸ்யத்தைத் தூண்டுகிறது. 

வர உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், இறுதிக்கட்ட வாக்குவேட்டை தீவிரமடைந்துள்ளது. ஒவ்வொரு வேட்பாளர்களும் நூதன முறையில் வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர். இதனிடையே அடுத்தடுத்து கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியாகி களநிலவரத்தை சூடாக்கி வருகிறது.

குறிப்பாக, இந்தமுறை திண்டுக்கல் நாடாளுமன்றத்தொகுதியில் பாஜக கூட்டணியைச் சேர்ந்த பாமக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. 

அதன்படி, திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தமும், அதிமுக கூட்டணி சார்பில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வேட்பாளர் நெல்லை முகமது முபாரக்கும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜனும், பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் திலக பாமா ஆகியோரும் களமிறங்கியிருக்கின்றனர்.

இந்நிலையில் நெல்லை முபாரக், சொந்த ஊரைச் சாராதவர் என்பதாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் வலுவான வேட்பாளரை இறக்காததும் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் பாமக வேட்பாளர் திலகபாமா, பட்டிவீரன்பட்டியைச் சார்ந்தவர் என்பது அவருக்குக் கூடுதல் பலமாகவும், 2019 எம்.பி. தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாமக சார்பில் நின்று, திண்டுக்கல் மாவட்டத்தின் பரீட்சயமான முகமாக மாறிப்போனார், திலகபாமா. இது அவருக்கு இந்த தேர்தல்களில் வாக்குகளாக மாறும் என பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் தமிழ்நாடு டைம்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் திலகபாமா, திண்டுக்கல் தொகுதியில் முன்னணி வகிப்பார் என தெரியவந்துள்ளது. அதன்படி, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் 28.80 விழுக்காடு வாக்குகளையும், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் எஸ்.டி.பி.ஐ 15.57 விழுக்காடு வாக்குகளையும்; பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க.வேட்பாளர் திலகபாமா 35.23 விழுக்காடு வாக்குகள் பெறுவார் எனவும் கணித்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க, பாமக வேட்பாளருக்கு சொந்த கட்சியிலேயே ஆதரவு இல்லை எனக்கூறப்படுகிறது. பாஜக வேட்பாளர்கள் மட்டும் தான், தற்போது ஆதரிப்பதாக தெரிகிறது. இதனால், திலகபாமா தனி ஆளாக கிராமம் கிராமாக சென்று, நிலக்கோட்டை பகுதி விவசாயக் கூலிகளிடம், அவரது பணிகளை செய்துகாட்டி வாக்கு கேட்டிருக்கிறார். இது அவருக்கு கூடுதல் பிளஸ் பாயிண்ட்டாக பார்க்கப்படுகிறது. இதனால், திண்டுக்கல்லில் கடும்போட்டிக்கு மத்தியில் சிறிய கேப்பில், திலக பாமாவுக்கு வாய்ப்பு இருப்பதாகக்கூறப்படுகிறது.

இதனால், திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியும், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 

அதேபோன்ற தென்மாவட்டத்தில் இருக்கும் முக்கியத் தொகுதியான தேனியிலும் பாஜக ஆதரவு வேட்பாளரும் அமமுக பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன் வெல்வார் என்று மவுத் டாக் பரவி வருகிறது. 

 

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்