NIA : எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் முபாரக் வீட்டில் என்ஐஏ சோதனை நிறைவு
NIA : நெல்லையில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக சோதனை அதிகாலை முதல் நடைபெற்று வந்தது. பின்னர் 10 மணியளவில் சோதனை நிறைவு பெற்றது.

கோப்புப்படம்
நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக அதிகாலை முதல் சோதனை நடைபெற்று வந்தது. பின்னர் 10 மணியளவில் சோதனை நிறைவு பெற்றது.
சென்னையில் இருந்து வந்துள்ள 5க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் காலை 5 மணி முதலே சோதனை நடத்தினர். தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை உள்ளட்ட 9 மாவட்டங்களிலும் என்ஐஏ சோதனை நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் இந்து முன்னணி பிரமுகரான இவர் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்து. 11 பேரை கைது செய்திருந்தனர்.