Horoscope Luck: லக்னத்தில் சுக்கிரன்.. ‘மருந்து கொடுத்தால் மகா ஜாக்பாட்’ - அடி பொலி ஆணழகன்! - சுவாரசிய அமைப்பு!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Horoscope Luck: லக்னத்தில் சுக்கிரன்.. ‘மருந்து கொடுத்தால் மகா ஜாக்பாட்’ - அடி பொலி ஆணழகன்! - சுவாரசிய அமைப்பு!

Horoscope Luck: லக்னத்தில் சுக்கிரன்.. ‘மருந்து கொடுத்தால் மகா ஜாக்பாட்’ - அடி பொலி ஆணழகன்! - சுவாரசிய அமைப்பு!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 23, 2024 12:22 PM IST

இவர்களுக்கு அலங்காரமான, அம்மன் வழிபாடு நல்லவிதமான பலன்களை கொடுக்கும். அதே போல மகாலட்சுமி வழிபாடும், இவர்களுக்கு அனுகூலத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் அவர் எப்படியானவராக இருப்பார்?
லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் அவர் எப்படியானவராக இருப்பார்?

குறித்து பிரபல ஜோதிடரான அவிநாசி ஜோதிலிங்கம் BAKTHI INFINITY என்ற சேனலில் பேசும்பொழுது, சுக்கிரன் ஆடம்பர கிரகம், கலைக்கான கிரகம், அழகானவன் தன்னை ரம்மியமாக வைத்துக் கொள்பவன்,  ஆடை ஆபரணம் அலங்கார பிரியன். உலகத்தில் உள்ள அத்துனை  வளர்ச்சிக்கான இடங்களையும் பார்த்து சந்தோஷப்படுபவன் சுக்கிரன்.

லக்னத்தில் சுக்கிரன் இருக்கும் பட்சத்தில், அவன் ஆணாக இருந்தால் அவனுக்கு, மனைவியை மிகவும் பிடிக்கும். பெண்ணாக இருந்தால், மூத்த சகோதரி அல்லது அத்தையை மிகவும் பிடிக்கும்.

சுக்கிரனை ஒரு போர்க்களமான கிரகம் என்றே நாம் அடையாளப்படுத்த முடியும்.

சுக்கிரனை பொறுத்தவரை, அந்த கிரகமானது வலது பக்கம் சுற்றிக் கொண்டே இருக்கும். ஆனால் அதனுடைய போக்கு, இடது பக்கமாக மெல்ல மெல்ல சென்று கொண்டே இருக்கும். 

சுக்கிரனை ஒரு போர்க்களமான கிரகம் என்றே நாம் அடையாளப்படுத்த முடியும். அங்கே அந்த தொந்தரவு இருப்பதின் காரணமாகத்தான், இங்கே மக்கள் தங்கள் மீது வாசனை திரவியங்களை பூசி கொள்கிறார்கள். சுக்கிரன் என்றாலே அசுரன் என்று பொருள். அதாவது சஞ்சீவி; மருத்துவ குணம் கொண்டவன். 

யாருக்காவது லக்னத்தில் சுக்கிரன் இருந்தால், அவர் கையால் மருந்து எடுத்துக் கொடுத்தால், அந்த நோயானது குணமாகிவிடும். கல்யாணத்திற்கு இவர்கள் கையால் மற்றவர்களுக்கு ஆடைகளை வழங்கும்பொழுது, நல்ல விதமான பலன்கள் வந்து சேரும். 

இவர்களுக்கு ஊர் சுற்றுவது, ஆடை, அணிகலன், அலங்காரம் உள்ளிட்டவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும். இவர்களுக்கு இந்த பிறவியை சந்தோஷமாக வாழ்ந்து களிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருக்கும்.

அம்மன் வழிபாடு நல்லவிதமான பலன்களை கொடுக்கும்.

இவர்களுக்கு அலங்காரமான, அம்மன் வழிபாடு நல்லவிதமான பலன்களை கொடுக்கும். அதே போல மகாலட்சுமி வழிபாடும், இவர்களுக்கு அனுகூலத்தை கொண்டு வந்து சேர்க்கும். 

தாமரைப்பூ வாங்கி கொடுத்து, பரிகாரம் செய்யும் பொழுது, இவர்களுக்கு அனுகூலம் வந்து சேரும். லக்னத்தில் சுக்கிரன் இருந்தால், நெய் தீபம் ஏற்றி வழிபடுவது, நெய்யை தானமாக வழங்குவது உள்ளிட்டவற்றை செய்யலாம்.

அது உங்களுக்கு நல்ல பலன்களை கொண்டு வந்து சேர்க்கும். லக்னத்தில் சுக்கிரன் இருக்கிறவர்கள் கஞ்சனூர் சுக்கிரன் ஆலயத்திற்கு சென்று வழிபடுவது மிகவும் விசேஷமாகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்