தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: உங்கள் வீட்டில் பணம் சேர குபேர பூஜையை இந்த மாதிரி செய்து பாருங்க.. உடனே பலன் கிடைக்குமாம்!

Money Luck: உங்கள் வீட்டில் பணம் சேர குபேர பூஜையை இந்த மாதிரி செய்து பாருங்க.. உடனே பலன் கிடைக்குமாம்!

Manigandan K T HT Tamil
Apr 24, 2024 12:59 PM IST

Kubera Poojai: குபேரனை வழிபடும்போது லட்சுமியையும் சேர்த்து வழிபட வழிபாட்டின் முழு பலன் கிடைக்குமாம். குபேர பகவான் நிலத்தில் விளையும் தானியங்களுக்கு அதிபதியாகத் திகழ்கிறார். இதனால், விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் பொருட்களை குபேரனுக்கு காணிக்கையாக சாத்தி வழிபடுகின்றனர்.

செல்வத்தின் அதிபதியாக குபேரர் விளங்கி வருகின்றார்.
செல்வத்தின் அதிபதியாக குபேரர் விளங்கி வருகின்றார்.

தீபாவளி என்றால் எண்ணெய் குளியல், சிறப்புப் பூஜை செய்தல், கோயிலுக்குச் செல்லுதல், பட்டாசுகள் வெடித்தல் என்பதுடன் வீட்டில் செல்வம் நிறைந்திருக்கும் லட்சுமி குபேர பூஜை செய்வதும் வழக்கம்.

சிறந்த சிவபக்தரான குபேரன், சிவபெருமானை நோக்கி 800 வருடங்கள் கடுந்தவமிருந்து அவரின் நட்பைப் பெற்றதாகக் கூறப்படுவதால் குபேரன் சிவன்சகா என அழைக்கப்படுகிறார்.

செல்வத்திற்கும் தனதான்யத்திற்கும் அதிபதியான குபேரனை விரதம் இருந்து வணங்கினால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

குபேரனை வழிபடும்போது லட்சுமியையும் சேர்த்து வழிபட வழிபாட்டின் முழு பலன் கிடைக்குமாம். குபேரன் நிலத்தில் விளையும் தானியங்களுக்கு அதிபதியாகத் திகழ்கிறார். இதனால், விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் பொருட்களை குபேரனுக்கு காணிக்கையாக சாத்தி வழிபடுகின்றனர்.

அருவடையின் போது இதை செய்கின்றனர். தீபாவளியின்போது நாம் செய்யும் முக்கியமான பூஜை தான் குபேர பகவனாக்காக நாம் செய்யும் சிறப்புப் பூஜை.

நாணய பூஜை

அந்தப் பூஜையோடு சேர்த்து நாணய வழிபாடு என்று சொல்லப்படும் ஒரு மகத்தான பூஜையும் கடைப்பிடிக்கப்படுகிறது.

தீபாவளி அன்று நாம் நாணய பூஜை செய்தால் எதிர்பாராத வழிகளில் செல்வம் கொழிக்கும் என்பது சித்த நூல்களில் சொல்லப்பட்ட ரகசியமாம்.

தீபாவளியன்று குபேர பகவானின் படத்துக்கு சந்தன குங்குமம் இட்டு மலர்களை வைத்து ஊதுபத்தி ஏற்றி கற்பூர ஆராதனை காண்பிக்க வேண்டுமாம்.

மேலும், குபேரனுக்கு உகந்தது 5 ரூபாய் நாணயம் என்பதால், ஒரு தட்டில் நிறைய 5 ரூபாய் நாணயங்களை சேர்த்து வைத்து, அழகாபுரி அரசே போற்றி எனும் குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி, தட்டில் இருக்கும் நாணயங்களை நாம் இரு கைகளால் அள்ளி எடுப்பதும் மீண்டும் அதை தட்டிலே போடுவதுமாக 108 போற்றிகள் முடியும் வரை செய்ய வேண்டுமாம்.

நாணய பூஜை செய்து முடித்ததும் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நெய்வேத்தியம் செய்து தீப, தூபம் காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டுமாம்.

குறுக்கும் நெடுக்குமாம் எண்களை கூட்டும்போது 72 வரக் கூடிய மாய சதுரத்தினை வரைந்து வைத்து குபேரனை வழிபடுவதும் உண்டு.

தீபாவளி நன்னாளில் இப்பூஜை செய்யும்போது நாணயங்களில் இருந்து எழும்பும் மங்களை இசையால் குபேரன் மனமகிழ்ந்து நிறைவான செல்வத்தை தந்தருள்வார் என்பது நம்பிக்கை.

குபேர பகவான்

குபேரன், செல்வத்தின் கடவுள் மற்றும் இந்து மதத்தில் நம்பப்படுகிறது. அவர் வடக்கின் ரீஜண்ட் (திக்பாலா), மற்றும் உலகின் பாதுகாவலர் (லோகபாலா) என்று கருதப்படுகிறார். அவரது பல அடைமொழிகள் அவரை ஏராளமான தெய்வீக உயிரினங்களின் அதிபதியாகவும், உலகின் பொக்கிஷங்களின் உரிமையாளராகவும் போற்றுகின்றன. குபேரன் பெரும்பாலும் குண்டான உடலுடனும், நகைகளால் அலங்கரிக்கப்பட்டவாராகவும், பணப் பானை மற்றும் சங்கை ஏந்தியவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.

வேத கால நூல்களில் குபேரன் குறித்த தகவல்கள் உள்ளன, புராணங்கள் மற்றும் இந்து இதிகாசங்களில் மட்டுமே தேவ (கடவுள்) அந்தஸ்தைப் பெற்றார். குபேரன் ஒரு காலத்தில் இலங்கையை ஆட்சி செய்தார், பின்னர் இமயமலையில் உள்ள அலகா நகரில் குடியேறினார் என்று வேதங்கள் விவரிக்கின்றன.

WhatsApp channel

டாபிக்ஸ்