குபேரனுக்கு மிகவும் பிடித்த ராசிகள்.. பிறப்பிலேயே பணக்கார யோகம் கொண்டவர்கள் யார்?.. உங்க ராசி இருக்கா வந்து பாருங்க?-here you can find out who are the rasi people who are blessed by lord kubera - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குபேரனுக்கு மிகவும் பிடித்த ராசிகள்.. பிறப்பிலேயே பணக்கார யோகம் கொண்டவர்கள் யார்?.. உங்க ராசி இருக்கா வந்து பாருங்க?

குபேரனுக்கு மிகவும் பிடித்த ராசிகள்.. பிறப்பிலேயே பணக்கார யோகம் கொண்டவர்கள் யார்?.. உங்க ராசி இருக்கா வந்து பாருங்க?

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 24, 2024 12:13 PM IST

Lord Kubera: சிலர் பிறக்கும் பொழுது செல்வத்தோடு பிறக்கின்றார்கள். சிலர் எளிமையான சூழ்நிலைகளில் பிறக்கும். கடின உழைப்பு மற்றும் இறைவனின் அருள் இவை அனைத்தும் சேர்ந்து ஒருவருக்கு முன்னேற்றத்தை கொடுக்கின்றது. அந்த வகையில் குபேரனின் அருள் ஆசியை பெறக்கூடிய ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

குபேரன்
குபேரன்

அப்படி அனைத்து கடவுள் உங்களுக்கும் விருப்பமான ராசிக்காரர்கள் இருப்பார்கள். அந்த வகையில் குபேரன் மற்றும் மகாலட்சுமி தேவி இருவருக்கும் மிகவும் பிடித்த ராசிக்காரர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு எப்போதும் செல்வம் மற்றும் அதிர்ஷ்டம் வந்து கொண்டே இருக்கும் என கூறப்படுகிறது.

சிலர் பிறக்கும் பொழுது செல்வத்தோடு பிறக்கின்றார்கள். சிலர் எளிமையான சூழ்நிலைகளில் பிறக்கும். கடின உழைப்பு மற்றும் இறைவனின் அருள் இவை அனைத்தும் சேர்ந்து ஒருவருக்கு முன்னேற்றத்தை கொடுக்கின்றது. அந்த வகையில் குபேரனின் அருள் ஆசியை பெறக்கூடிய ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவானின் ராசியாக விளங்கிவரும் உங்களுக்கு எப்போதும் அச்சமற்ற ஆற்றல் அதிகமாக இருக்கும். இதனால் எடுத்த வேலைகளை தயக்கம் என்று செய்ய முடியும். கடின உழைப்பால் நீங்கள் முன்னேற்றத்தை பெறுவீர்கள். இதனால் நீங்கள் முன்னெடுத்து வைக்கும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். நல்ல முன்னேற்றம் இருக்கும். செல்வம் அதிகரிக்கும். ஏனென்றால் உங்களுக்கு குபேரனின் அருள் எப்போதும் இருக்கும்.

சிம்ம ராசி

 

சூரிய பகவானால் ஆளக்கூடிய ராசிக்காரர்கள் அதிக ஆளுமை திறன் இயற்கையிலேயே உங்களுக்கு உண்டு. பிறரை ஆளக்கூடிய சிந்தனையிலேயே எப்பொழுதும் நீங்கள் இருப்பீர்கள். உங்கள் வேலையில் முன்னேற்றம் இருக்கும். எப்போதும் தலைமையை நோக்கி பயணம் செய்யக் கூடியவர்கள். பணத்தை எளிதாக சம்பாதிக்கக்கூடிய திறன் உங்களுக்கு உண்டு. ஏனென்றால் குபேரனின் ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு.

விருச்சிக ராசி

 

நிதி நிலைமையில் எப்போதும் முன்னேற்றத்தை காண விரும்பக் கூடியவர்களில் நீங்களும் ஒருவர். எப்போதும் ரகசியமாக இருக்கக்கூடியவர்கள். எடுத்த காரியங்களை துல்லியமாக திட்டமிட்டு செயல்படுத்துவதில் நீங்கள் வல்லவர். அதனால் உங்களுக்கு முன்னேற்றம் எப்போதும் இருக்கும். இலக்கை நோக்கி எப்போதும் பயணிப்பதில் விடாமுயற்சியோடு செயல்படுவீர்கள். இதனால் நிதி நிலைமையில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. உங்களுடைய அதீத நம்பிக்கை செல்வத்தை எப்போதும் சேர்த்துக் கொண்டே இருக்கும். கடின உழைப்பால் அமைதியாக குபேர யோகத்தை பெற்று செல்வத்தின் அதிபதியாக மாறுவீர்கள். ஏனென்றால் குபேரனின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner