Actress Lakshmi: ‘என்னோட புடவை எல்லாமே…அப்படியொரு டேஸ்ட் அவருக்கு’ - கணவர் குறித்து லட்சுமி ஓப்பன் டாக்!
காரணம், யாராக இருந்தாலும் என்றாவது ஒருநாள் அந்த மேலே சென்று தான் ஆக வேண்டும். பயம் என்ற ஒன்று உங்களுக்குள் வந்துவிட்டால், நீங்கள் வாழ்வதே வேஸ்ட்டாக மாறிவிடும்.
நடிகை லட்சுமி, தன்னுடைய கணவர் சிவச்சந்திரன் குறித்து அவள் விகடன் சேனலுக்கு கடந்த வருடம் கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார்.
இது குறித்து அவர் பேசும் போது , “ இறைவனின் அருளால் இன்றும் நான் சினிமா துறையில் நடித்துக் கொண்டிருக்கிறேன். வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்கு செல்கிறேன். சில நேரங்களில் என்னையே நான் கேட்பதுண்டு. லட்சுமி உனக்கு பயமாக இல்லையா என்று..?
அதற்கு என்னிடம் இருந்து, பயமில்லையே.. என்பது பதிலாக வரும். எதற்காக பயப்பட வேண்டும். சாவு மீது பயம் இருக்கும் பட்சத்தில் தான், நீங்கள் தனியாக செல்லும் பொழுது, உங்களுக்கு பயம் வரும். அது எனக்கு என்றைக்குமே இருந்ததே கிடையாது.
காரணம், யாராக இருந்தாலும் என்றாவது ஒருநாள் அந்த மேலே சென்று தான் ஆக வேண்டும். பயம் என்ற ஒன்று உங்களுக்குள் வந்துவிட்டால், நீங்கள் வாழ்வதே வேஸ்ட்டாக மாறிவிடும்.
நாம் நம்மை மிகவும் அழகாக பார்த்துக் கொள்ள வேண்டும். நமக்கு நம்மை பிடிக்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை, ஆனால் உடன் இருப்பவர்களுக்கு பிடிக்காமல் போய்விட்டால், நமக்கு மிகப்பெரிய பிரச்சினை வந்துவிடும்.
நாம் நம்மை அழகாக பார்த்துக் கொள்ளும் பட்சத்தில், அது நம்முடைய பலமாக எப்போதும் இருக்கும். ஆரோக்கியத்தை மிகவும் அழகாக பார்த்துக் கொள்வது ஒரு பெண்ணுக்கு மிக மிக முக்கியம் என்பது என்னுடைய கருத்து.
ஒரு கட்டம் வரை நான் என்னுடைய வாழ்வில் சுதந்திரமானவளாக இல்லை. ஆனால், சம்பாதித்த பின்னர் நான் சுதந்திரமானவளாக மாறிவிட்டேன்.
நானும், என்னுடைய கணவரும் நீண்ட தூரம் பயணம் செய்வோம். ஆரம்ப காலத்தில் இங்கிருந்து பெங்களூருக்கு காரில் சென்று, காலை உணவை அங்கே முடித்து விட்டு, பின்னர் மீண்டும் பயணித்து சென்னையில் மதிய உணவை முடிப்போம்.
இன்று வரை என்னுடைய புடவைகள் அனைத்தையுமே அவர்தான் தேர்வு செய்கிறார். முன்பெல்லாம் என்னுடைய அம்மா அதை செய்து கொண்டிருந்தார் இப்போது என்னுடைய கணவர் செய்கிறார். அவர் மிக அழகாக எனக்கான ஆடைகளை தேர்வு செய்வார். கேமராவிற்கு எது நன்றாக இருக்கும், எது சரியாக இருக்கும் என்பது அவருக்கு நன்றாக தெரியும்.
அவருக்கு என்னுடைய டேஸ்ட் என்ன என்பது தெளிவாகத் தெரியும். காரணம், அவர் என்னையே செலக்ட் செய்து இருக்கிறார் என்றால், அவருக்கு அப்படியான ஒரு டேஸ்ட்தானே இருந்திருக்கும்.
எனக்கு நகைகள் மீதெல்லாம் பெரிய விருப்பம் கிடையாது. ஆனால், என்னுடைய டயட், உடற்பயிற்சிகள் யோகா உள்ளிட்டவற்றில் நான் மிகவும் கறாராக இருப்பேன். அதில் எனக்கு ஆர்வம் அதிகம். அழகு என்பது நம் உள்ளிருந்து வரவேண்டும். வெளியே மேக்கப் பூசி கொள்வதால் வந்துவிடாது.
மார்க்கெட்டில் அவ்வளவு மேக்கப் சார்ந்த பொருட்கள் விற்கப்படுகின்றன. அதற்காக நான் மஞ்சள் தேய்த்து குளித்துக் கொண்டே இருங்கள் என்று சொல்லவில்லை. உங்களது உடலையும், மனதையும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறேன்” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்