தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நிதியுதவி அளித்தார் நடிகர் சிவகார்த்திகேயன்..எவ்வளவு தெரியுமா?

Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நிதியுதவி அளித்தார் நடிகர் சிவகார்த்திகேயன்..எவ்வளவு தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Apr 23, 2024 05:35 PM IST

Actor Sivakarthikeyan: தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் நிதியுதவி அளித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன்

ட்ரெண்டிங் செய்திகள்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், கொரோனா காலத்தில் ஏற்பட்ட விலைவாசி உயர்வின் காரணமாக நிதி பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக பல ஆண்டுகளாக கட்டிடப் பணிகள் நிறைவு பெறாமல் நிலுவையில் உள்ளது. இந்த பணி முழுமை பெற 40 கோடிக்கு மேல் தேவைப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.

இதற்கான நிதியை நடிகர், நடிகைகள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி நிதி வழங்கினார். அவரைத் தொடர்ந்து, நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோரிடம் வழங்கினார்.

அவரைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

இந்தநிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிட பணிகளுக்காக தனது சொந்த நிதியில் இருந்து நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், "தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளை தொடர்வதற்காக சங்கத்தின் வைப்புநிதியாக தனது சொந்த வருமானத்திலிருந்து ரூ.50 லட்சத்துக்கான காசோலையை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்க நிர்வாகிகள்:

தென்னிந்திய நடிகர் சங்கம் 1952ஆம் ஆண்டு முதல் சென்னையில் இயங்கி வருகிறது. இதன் தற்போதைய தலைவராக நாசர் செயல்பட்டுவருகிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தி சிவகுமாரும் பொறுப்பு வகித்து வருகின்றனர். மேலும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர்களாக பூச்சி முருகனும் பதவி வகித்து வருகின்றனர். இந்தச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக குஷ்பூ, கோவை சரளா, ராஜேஷ், அஜய் ரத்னம், பசுபதி, சிபிராஜ், லதா சேதுபதி, விக்னேஷ், சோனியா, பிரசன்னா, நந்தா, ரமணா, தளபதி தினேஷ், சரவணன், பிரேம் குமார், ஸ்ரீமன், ரத்தின சபாபதி, ரத்தினப்பா, எம்.ஏ. பிரகாஷ், வி.கே.வாசுதேவன், ஆர். ஹேமச்சந்திரன், எஸ்.எம்.காளிமுத்து ஆகிய சினிமா மற்றும் நாடகக் கலைஞர்கள் உள்ளனர்.

முன்னதாக, நடிகர் சங்கத்தலைவராக 2000ஆம் ஆண்டு மறைந்த நடிகர் விஜயகாந்த் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தலைமையிலான நிர்வாகக்குழு, மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு நடிகர் மற்றும் நடிகைகளை அழைத்துச்சென்று கலைநிகழ்ச்சிகள் நடத்தி, அதன்மூலம் வருவாய் ஈட்டி ரூ. 2 கோடிக்கும் அதிகமான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்