தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Thulam Rasipalan: ‘புரட்டாசி புரட்டி எடுக்கும்’ துலாம் தமிழ் புத்தாண்டு பலன்!

Thulam RasiPalan: ‘புரட்டாசி புரட்டி எடுக்கும்’ துலாம் தமிழ் புத்தாண்டு பலன்!

HT Tamil Desk HT Tamil
Apr 12, 2023 11:14 AM IST

Tamil Newyear Rasipalan 2023: துலாம் ராசிக்கான சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் இதோ:

துலாம் ராசிபலன்கள்
துலாம் ராசிபலன்கள்

இரு வகை தொழில்களை செய்யும் அளவிற்கு நல்ல பலன்கள் இருக்கும். பொருளாதார வளர்ச்சி அடையும். நீண்ட நாட்களாக இருந்த மனக்கவலை நிவர்த்தியடையும். வைகாசி மாதத்தில் லாப ஸ்தானாதிபதி சூரியன் அஸ்டமஸ்தானத்தில் மறைகிறார். இதனால் உங்கள் புகழுக்கு கலங்கம் ஏற்படும். பொருளாதார ரீதியான நடுக்கம் ஏற்படும். மகாவிஷ்ணுவை வழங்குவது நன்மை தரும். 

ஆனி மாதத்தில் ஜூன்-ஜூலையில் ராசி நாதன் சுக்ரன், 11 வது ஸ்தானத்தில் வருகிறார். உழைத்து குறைந்த லாபம் வருவதாக கவலையடைந்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எளிய உடல் உழைப்பு செய்து அதிக லாபம் கிடைக்கும். சூரியன் 9 ம் பாகத்தில் செல்வதால் நன்மைகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் செய்கிறார். 

ஆடி மாதத்தில் சூரிய பகவான் 10 வது ஸ்தானத்தில் புதன் பகவானுடன் சேர்ந்து செல்கிறார். இதனால் நன்மைகள் பல நடக்கும். அதிர்ஷ்டங்கள் அடிக்கும். ஆவணி மாதத்தில் 11 வது ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன் உள்ளிட்ட எல்லா கிரகங்களும செல்வதால் பலன்கள் கிட்டும். பொதுவாகவே 11 ம் ஸ்தானம் லாப ஸ்தானம். 

புரட்டாசி மாதத்தில் செலவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதை சுபச்செலவுகளாக மாற்றிக் கொண்டால் நல்லது. ஐப்பசியில் செவ்வாய் துலாம் ராசியில் செல்வதால், புதிய குடும்ப உறவுகள் அமையும். அக்டோபர்-நவம்பர மாதத்தில் வரன்கள் கிடைக்கும். ஆண், பெண் இருவருக்கும் திருமண பாக்கியம் கிடைக்கும். 

கார்த்திகை மாதத்தில் பொருளாதார ரீதியான முன்னேற்றம் இருக்கும். ஏற்றம் கிடைக்கும். மார்கழி மாதத்தில் கூட்டுத் தொழில் செய்யவும், நண்பர்களுடன் இணைந்து தொழில் செய்ய உகந்தது. தை மாதத்தில் கணவன்-மனைவி இடையே பிரிவுகள் ஏற்படலாம். தொழில் ரீதியான பிரிவுகளால் வெளிநாடு, வெளிமாநிலம் செய்ய வாய்ப்பு. பிரதோஷ வழிபாடு குறைகளை தீர்க்கும். மகாவிஷ்ணு சகஸ்ரநாமம் வாரந்தோறும் சொல்வது நல்லது. 

மாசி மாதம், உறவுகளுக்குள் இருந்த சிக்கல்கள், மனஸ்தாபங்கள் எல்லாம் தீர்க்கும் மாதமாக இருக்கும். பிப்ரவரி-மார்ச் மாதத்தில் இது நடக்கும். பங்குனியில் தொழில் லாபம் ஏற்படும். சோபகிருது தமிழ் புத்தாண்டியில் மகாவிஷ்ணு வழிபாடும் துலாம் ராசியினருக்கு பெரிய அளவில் நன்மை பயக்கும். 

WhatsApp channel

டாபிக்ஸ்