தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Simmam Rasipalan: ‘ஒரு மாதம் மட்டுமே சிக்கல்’ சிம்மம் தமிழ்புத்தாண்டு ராசி பலன்!

Simmam RasiPalan: ‘ஒரு மாதம் மட்டுமே சிக்கல்’ சிம்மம் தமிழ்புத்தாண்டு ராசி பலன்!

HT Tamil Desk HT Tamil
Apr 12, 2023 12:05 PM IST

Tamil NewYear RasiPalan 2023: சிம்ம ராசிக்கான சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் இதோ:

சிம்மம் ராசிபலன்கள்
சிம்மம் ராசிபலன்கள்

கிராம தேவதை, குலதெய்வ வழிபாடும் அவசியம். வைகாசி மாதத்தில்  9ம் பாதத்தில் குருபகவான் செல்வதால் நன்மைகள் கிடைக்கும். உடன் புதன், ராகு சேர்ந்திருப்பதால் ஆற்றல், புத்தி கூர்மை, படிப்பில் நாட்டம் , கலைத்துறையில் முன்னேற்றம் ஏற்படும். 

ஆனி மாதத்தில் சூரியபகவான் 11 ம் பாகத்தில் செல்வதால் நன்மை கிட்டும். பொருளாதார வளர்ச்சி கிடைக்கும். சுக்ரன் 11 ம் இடத்தில் இருப்பதால் தொழில் வளர்ச்சி கிடைக்கும். ஆனி கடைசியில் 12 ம் பாதத்திற்கு சுக்ரன் செல்வதால் குழந்தைகள், மனைவி, கணவனை பிரிந்து இருக்கும் சூழல் உருவாகும். வெளிநாடு, வெளியூர் செல்ல வாய்ப்பு.

ஆடி மாதத்தில் முதலீடு உயர்வு, தொழில் வளர்ச்சிகிடைக்கும். ஆவணி மாதத்தில் அத்தனை கிரகங்களும் ஜென்மத்தில் சேர்கின்றன. இதனால் புதிய தொழில் வளர்ச்சி, புதிய உத்வேகம் பிறக்கும், எதிரிகளை துவம்சம் செய்வது, தேர்தலில் வெற்றி பெறுவது, வழக்கு வெற்றிகள் கிடைக்கும். 

புரட்டாசியில் பேச்சு ஆற்றலை தருவார். ஐப்பசி மாதத்தில் திருமண யோகம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மார்கழி 4 ம் தேதி சனி பெயர்ச்சி, ஜென்மஸ்தானத்தில் இருந்து 7 ம் பாகத்தில் நகர்கிறார். அந்த மாதத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக வாகனங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

தை மாதத்தில் சூரியன் 6வது ஸ்தானத்தில் செல்கிறார். புதனும் பெயர்ச்சியடைகிறார். இதனால் புதிய தொழில் தொடங்கலாம், வேலை கிடைக்கும். மாசி மாதத்தில் திருமண உறவின் வலிமை கிடைக்கும். குரு நேரடியாக பார்ப்பதால், தைரியமாக செயல்படுவீர்கள். வெள்ளை கிழமை தோறும் லலிதாம்பிகை சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்வது நன்மை பயக்கும். 

WhatsApp channel

டாபிக்ஸ்