தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kanni Rasipalan: ‘சித்திரையில் நித்திரை பாதிக்கும்’ கன்னி தமிழ்புத்தாண்டு பலன்!

Kanni RasiPalan: ‘சித்திரையில் நித்திரை பாதிக்கும்’ கன்னி தமிழ்புத்தாண்டு பலன்!

HT Tamil Desk HT Tamil
Apr 12, 2023 11:41 AM IST

Tamil NewYear Rasipalan 2023: கன்னி ராசிக்கான சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் இதோ:

கன்னி ராசி பலன்கள்
கன்னி ராசி பலன்கள்

வைகாசியில் 9ம் பாகத்தில் சூரியன் இருப்பதால், நன்மைகள் தருவார். முன்னோர் சொத்துக்கள் வரும். ராசிநாதன் புதன் பகவான் பெயர்ச்சி அடைந்து, ஜூன் மாதத்தில் பூர்வ புண்ணிய பாதத்தில் செல்வதால் நல்ல பலன்களை தருவார். வைகாசி, ஆனி மாதத்தில் சாமிக்கு விடுபட்ட நேர்த்திகடன்களை செய்துவிடுங்கள். அதற்கான சூழல் உருவாகும். 

ஆடி மாதத்தில் பல நன்மைகள் நடக்கும். 11 ம் பாதத்தில் சூரியன் செய்வதால் பொருளாதார வளர்ச்சி, சமூகத்தில் மரியாதை, புதிய பட்டங்கள் கிடைக்கும். ஆவணி மாதத்தில் 12 ம் பாதத்தில் அதிக கிரகங்கள் வந்து சேர்கின்றனர். ராஜயோக அமைப்பு ஏற்படும். 

புதிய முதலீடு செய்ய, வெளிநாடு வாய்ப்பு, மாணவர்களுக்கு படிப்பு மீது ஈர்ப்பு வர ஆவணி மாதம் அமையும். புரட்டாசி மாதத்தில் சூரியன் ஜென்மஸ்தானத்தில் செல்கிறார். செவ்வாயும் உடன் செல்கிறார். புரட்டாசி-ஐப்பசியில் தொழில் ரீதியாக கணவன்-மனைவி பிரிய ஏற்படலாம். ஆனாலும், பிரிவு நிரந்தரமாக இருக்காது. 

கார்த்திகை மாதத்தில் ராசிநாதன் புதன் பகவான், 3 வது பாதத்தில் செல்கிறார். புதிய தொழில் வளர்ச்சி ஏறப்படும். வேண்டிய இடமாற்றம், தொழில் மாற்றம் ஏற்படும். மார்கழியில் புதன் வக்கிரகதி நிவர்த்தி அடைந்து ஜனவரி 8 க்கு பின் புதிய சொத்துக்கள் வாங்கும் ஆசியை வழங்குகிறார். இடம் வாங்கும் வாய்ப்பு வரும் போது , அதற்கான இடையூற ஏற்படும். அதற்கு பதில் வேறு ஒரு இடம் வாங்கும் வாய்ப்பு வரும். 

தை மாதம் சிறப்பாக இருக்கும். மாசி மாதம் எதிரிகளை வீழ்த்தும், பங்குனி மாதத்தில் ராகு, புதன், சூரியன் சேர்வதால் திருமண பாக்கியம் கிடைக்கும். சிவபெருமான் வழிபாடு, வியாழன் தோறும் தட்சினாமூர்த்தியை வணங்குங்கள். சிவனுக்கு வில்வ வழிபாடு கூடுதல் நன்மை தரும்.

WhatsApp channel

டாபிக்ஸ்