தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஆடி செவ்வாய் வழிபாடு - அருள்மிகு அகத்தீஸ்வரர் கோயில்!

ஆடி செவ்வாய் வழிபாடு - அருள்மிகு அகத்தீஸ்வரர் கோயில்!

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 02, 2022 07:38 PM IST

சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

அகத்தீஸ்வரர் கோயில்
அகத்தீஸ்வரர் கோயில்

சிவபெருமானின் திருமண வைபோகத்திற்காக அனைவரும் கயிலாயத்தில் கூடியதாகக் கயிலாயம் தாழ்ந்து போனதாம். அதனைச் சமம் செய்யச் சிவபெருமான் அகத்தியரைத் தென்திசை நோக்கிச் செல்ல ஆணையிட்டுள்ளார். 

அனைவரும் திருமண காட்சியைப் பார்க்கும் பொழுது தன்னால் திருமணம் காட்சியைப் பார்க்க இயலாது என்று இறைவனிடம் வேண்டி உள்ளார் அகத்தியர்.

எங்கு நீ என்னை நினைத்தாலும் அங்குத் திருமணக் கோலத்தில் காட்சி அளிப்பேன் என்று இறைவனால் அகத்தியரிடம் தெரிவித்தார். இத்திருக்கோயிலில் நடராஜர், பைரவர், சுப்ரமன்னியர், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, வில்வாம்பிகை, ஆதிசங்கரர் ஆகிறார்களுக்குச் சன்னதிகள் வலம்புரி விநாயகர் பின்புறம் அஷ்ட லிங்கமும் காட்சியளிக்கின்றன.

கோயிலின் பின்புறம் ஆதிசங்கரருக்கு வளர்பிறை பஞ்சமியில் விசேஷ அபிஷேகமும் நடைபெறுகின்றது. அம்பாள் திருமணக் கோலத்தில் தங்க நகைகளுடன் காட்சி அளித்ததால் ஸ்வர்ணாம்பிகையாக பக்தர்களுக்குக் காட்சி புரிகின்றார்.

அம்பாள் சன்னதி முகப்பில் மகாலட்சுமியும், சரஸ்வதி சன்னதியும் எதிரே நவக்கிரக மண்டபம் காணப்படுகின்றன. அகத்தீஸ்வரர் கோயிலின் தென்புற வாசல் எதிரே உள்ள சனிக்கோயில் வீரபத்திரரும் காட்சி அளிக்கின்றார். கோரப்பல்லுடன் இடது கையில் தண்டம் இயங்கி இவரது அருகில் வணங்கிய கோலத்தில் தட்சனும் காணப்படுகின்றார்.

முன் மண்டபத்தில் பத்ரகாளி சன்னதியும் அமையப் பெற்றுள்ளது. அகத்தியருக்கு ஒரு ஆடி மாத செவ்வாய்க்கிழமை என்று இறைவனால் காட்சி தந்ததாக ஐதீகம். எனவே இங்கு ஆடி செவ்வாய்க்கிழமைகளில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் விசேஷ வழிபாடும் நடக்கின்றன.

பௌர்ணமி தோறும் வீரபத்திரருக்குச் சிறப்புப் பூஜைகளும் இக்கோயிலில் நடைபெறுகின்றது. சிவ அம்சம் என்பதால் சிவராத்திரி அன்று இரவில் ஒரு கால பூஜையும் பிரதோஷ வேளையில் சிறப்புப் பூஜையும் நடைபெறுகின்றது.

WhatsApp channel