தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Transit : இந்த ராசிக்காரர்களுக்கு திருமணம் கைகூடி வரும்.. உங்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்..

Guru Transit : இந்த ராசிக்காரர்களுக்கு திருமணம் கைகூடி வரும்.. உங்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்..

Divya Sekar HT Tamil
Aug 25, 2023 10:45 AM IST

குரு பகவான் செப்டம்பர் 4 முதல் மேஷ ராசியில் வக்ரமடைகிறார். ராகு உடன் இணைந்துள்ள குரு பகவான் வக்ரமடைவதால் யாருடைய வாழ்க்கையில் திடீர் திருப்புமுனையும் எதிர்பாராத மாற்றமும் ஏற்படும் என்று பார்க்கலாம்.

குரு பகவான்
குரு பகவான்

மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, குரு தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது. குரு பகவான் செப்டம்பர் 4 முதல் மேஷ ராசியில் வக்ரமடைகிறார். ராகு உடன் இணைந்துள்ள குரு பகவான் வக்ரமடைவதால் யாருடைய வாழ்க்கையில் திடீர் திருப்புமுனையும் எதிர்பாராத மாற்றமும் ஏற்படும் என்று பார்க்கலாம்.

துலாம்

பங்கு வர்த்தகத்தில் பலன் கிடைக்கும். உங்கள் ராசிக்கு ஏழாவது வீடான களத்திர ஸ்தானத்தில் ராகு உடன் பயணம் செய்யும் குரு பகவான் வக்ர கதியில் செல்வதால் திருமண வாழ்க்கையில் நன்மைகள் அதிகம் நடைபெறும். சிலருக்கு திருமணம் கைகூடி வரும். 

உங்கள் ராசியை குருபகவான் பார்வையிடுவதால் தொழில் வியாபாரம் சிறப்படையும். பரணி, அஸ்வினி நட்சத்திரங்களில் செல்லும் குருபகவானால் உங்களின் செல்வாக்குக் கூடும். பண வருமானம் அதிகரிக்கும்.

தனுசு

உடல் ஆரோக்கியத்துடன் உற்சாகத்துடனும் இருக்கும். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். பணி செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் ராசிக்கு 11ஆம் வீட்டை பார்க்கும் குருபகவானால் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

 உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குருபகவான் உங்கள் ராசியை ஒன்பதாம் பார்வையாக பார்க்கிறார். 

குழந்தைகளினால் நன்மைகள் ஏற்படும்.  வருமானம் கூடும். ராசிக்கு ஒன்பதாம் வீட்டினை பார்க்கும் குருபகவானால் ஆன்மீக பயணங்கள் அதிகரிக்கும். அப்பாவினால் உதவி கிடைக்கும். மகளுக்கு திருமணம் கைகூடி வரும். 

மீனம்

குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும், திருமண முயற்சிகள் சிலருக்கு கை கூடி வரும். வீடு கட்டும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 

உங்களுடைய ராசி நாதன் குருபகவான் ராசிக்கு இரண்டாவது வீடான குடும்ப இரண்டாம் வீடான தன ஸ்தானத்தில் ராகு உடன் பயணம் செய்தாலும் வக்ரமடைவது நன்மை தரும் அமைப்பாகும். உங்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். பிளவு பட்ட குடும்பம் ஒன்று சேரும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் நீங்கும். 

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்