தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi: பணம் கொட்ட போகுது பிடிக்க ரெடியா? ’குரு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் இந்த 5 ராசிகளுக்கு மட்டும்தான்!’

Guru Peyarchi: பணம் கொட்ட போகுது பிடிக்க ரெடியா? ’குரு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் இந்த 5 ராசிகளுக்கு மட்டும்தான்!’

Kathiravan V HT Tamil
Apr 27, 2024 10:31 PM IST

”ஒருவரது ஜாதகத்தில் குரு பலம் இருக்கும் போது பொருளாதார நிலைத்தன்மை, செல்வம் மற்றும் செழிப்பை அதிகரிக்க உதவும். கல்வியில் வெற்றி, ஞானம் மற்றும் ஞானத்தைப் பெறுதல், புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது ஆகியவற்றிற்கு குரு பலம் உதவும்”

2024-25ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்
2024-25ஆம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பகவானை பொறுத்தவரை ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு ராசிக்கும் இடம் பெயர்கிறார்.9 கிரகங்களில் ஒருவரான குரு பகவான், "தேவர்களின் ஆசிரியர்" என அழைக்கப்படுகிறார். "ஞானத்தின் கிரகம்" என்று அழைக்கப்படும் வியாழன் கிரகத்தைக் குறிக்கிறது. ஒருவரது ஜாதகத்தில் குரு பலம் இருக்கும் போது பொருளாதார நிலைத்தன்மை, செல்வம் மற்றும் செழிப்பை அதிகரிக்க உதவும். கல்வியில் வெற்றி, ஞானம் மற்றும் ஞானத்தைப் பெறுதல், புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது ஆகியவற்றிற்கு குரு பலம் உதவும்.

தற்போது நடைபெற உள்ள குரு பெயர்ச்சி பொதுவாகவே எல்லோருடைய வாழ்கையிலும் நல்ல பணப்புழக்கத்தை ஏற்படுத்தும், இருந்தாலும் இது ஒரு சில ராசிக்காரர்களுக்கு அபரிவிதமான பண வரவை கொடுக்கும். 

மேஷம்

மேஷம் ராசி மற்றும் மேஷம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இது குரு பெயர்ச்சி ராஜயோக காலத்தை கொடுக்கிறது. தன ஸ்தானத்தில் குரு பகவான் உள்ளதால் வாழ்கையில் முன்னேற்றம் அடைய முயற்சி எடுக்கும் போது பெரிய நன்மைகளை அடையலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு இவர்களுக்கு எப்போதும் இருக்கும். சொத்து சேர்க்கைக்கான அதிக வாய்ப்புகளை குரு பகவான் ஏற்படுத்தி தருவார். 

ரிஷபம்

ரிஷபம் ராசி மற்றும் ரிஷபம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு மிகப்பெரிய நன்மைகளை அள்ளித்தர போகிறார். உங்கள் ராசிக்கே குரு பகவான் வருவதால்,  எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். 

கன்னி 

கன்னி ராசி மற்றும் கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குருவின் பார்வை படுவதால் பெரும் நன்மைகள் கிடைக்க போகிறது. ஐந்தாம் பார்வையாக குரு பகவான் கன்னியை பார்ப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும், பணப்புழக்கம் அதிகரிக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். 

விருச்சிகம்

விருச்சிகம் ராசி மற்றும் விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே குருவின் சம சப்தம பார்வை கிடைக்கிறது.  இதனால் அடுத்த ஓராண்டுக்கு நீங்கள் எடுக்க கூடிய சிறிய முயற்சியில் கூட மிகப்பெரிய வெற்றியை அடையலாம்.7ஆம் வீட்டில் உள்ள குரு பகவான் மூலம் உங்கள் வாழ்கைத்துணை மூலம் நன்மைகள் கிடைக்கும். மேலும் தொழிலுக்கு துணை புரிவோர்கள் மூலம் விருச்சிகம் ராசிக்கு நன்மைகள் கிடைக்கும்.  அர்தாஷ்டம சனி இருந்தாலும், குரு பார்வையால் மிகுந்த நன்மைகளை விருச்சிகம் ராசிக்காரர்கள் பெறுவார்கள். 

மகரம்

மகரம் ராசி மற்றும் மகரம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மிகப்பெரிய கோடீஸ்வர யோகம் உண்டு. குரு பகவான் சிறப்பு பார்வையான 9ஆம் பார்வை மகரத்தில் விழுவதால், நன்மைகள் கிடைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து குரு பார்வை கிடைப்பதால் வீடு, நிலம், வாகனம் வாங்குவது, வெளிநாடுகளுக்கு செல்வது உள்ளிட்ட பலன்கள் ஏற்படும்.  

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel