சனி துரத்தி துன்பப்படுத்தப் போகும் ராசிகள்.. மேஷம்.. ரிஷபம்.. கன்னி.. கண்ணீரில் கதறுவது உறுதி!
Saturn transit: சனிபகவான் வருகின்ற ஜூன் மாதம் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்ய உள்ளார். வரும் நவம்பர் 15 ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்ய உள்ளார். இதனால் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும்
நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனிபகவான். நீதிமானாக விளங்க கூடியவர் இவர் சனிபகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் இவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இவர் கும்பம் மற்றும் மகர ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார்.
சனிபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சனி பகவான் கடந்த ஆண்டு இறுதியில் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் நுழைந்தார். இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். அவர் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது.
சனிபகவான் வருகின்ற ஜூன் மாதம் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்ய உள்ளார். வரும் நவம்பர் 15 ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்ய உள்ளார். இதனால் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். இருப்பினும் மூன்று ராசிகள் மிகவும் சிரமமான சூழ்நிலையை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவு தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சனி வக்ரமாக பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்க அதிக வாய்ப்பு கிடையாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிகமாக கவனமாக இருக்க வேண்டும். பல ஆசைகள் நிறைவேறாமல் போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மன உளைச்சல் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். ஜூன் மாதத்தில் இருந்து ஐந்து மாதம் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மிகவும் சோம்பேறித்தனமாக இருக்கும். காதல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷப ராசி
உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி வக்ரமடைய உள்ளார். இதனால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடின உழைப்பு உங்களுக்கு பெரிய பலன்களை பெற்றுத் தராது. நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கியது. அதிக கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு லாபம் இருக்காது. குடும்பத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். புதிய முயற்சிகள் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.
கன்னி ராசி
உங்கள் ராசியில் ஆராவது வீட்டில் சனி வக்ரமடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு மிகப்பெரிய யோகங்கள் கிடைப்பதற்கு சற்று தாமதமாகவும் நிதி ரீதியாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடன் வேலை செய்பவர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடினமான உழைப்பு உங்களுக்கு அதிக பலன்களை பெற்று தராது. மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வருமானத்தில் சிக்கல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9