தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Agni Natchathiram : அக்னி நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா! என்ன செய்ய கூடாது.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது பாருங்க!

Agni Natchathiram : அக்னி நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா! என்ன செய்ய கூடாது.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
May 09, 2024 02:09 PM IST

Agni Natchathiram : சூரிய பகவான் சித்திரை மாதம் மேஷம் ராசியில் நுழைகிறார். அதன் காரணமாகவே சூரியனின் கதிர்கள் நம்மைச் சுட்டுப் பொசுக்குகிறது. கார்த்திகை நட்சத்திரத்தின் தேவதையாக விளங்கும் அக்னி தேவன் இந்த காலகட்டத்தில் வெப்பத்தைக் கக்குவதால் இது அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது.

அக்னி நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா! என்ன செய்ய கூடாது.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது பாருங்க!
அக்னி நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா! என்ன செய்ய கூடாது.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது பாருங்க!

ஜோதிடத்தின் கணிப்பின் படி சூரிய பகவான் சித்திரை மாதம் மேஷம் ராசியில் நுழைகிறார். அதன் காரணமாகவே சூரியனின் கதிர்கள் நம்மைச் சுட்டுப் பொசுக்குகிறது. பொதுவாக கார்த்திகை நட்சத்திரம் அக்னி நட்சத்திரத்தின் சக்தியைக் கொண்டது. கார்த்திகை நட்சத்திரத்தின் தேவதையாக விளங்கும் அக்னி தேவன் இந்த காலகட்டத்தில் வெப்பத்தைக் கக்குவதால் இது அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது.

மே 4ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடக்கும் அக்னி நட்சத்திரம் படிப்படியாகக் குறையத் தொடங்கும். இந்த அக்னி நட்சத்திர தோஷ காலம் முடிந்த பிறகு அனைத்து கோயில்களிலும் சிறப்புப் பூஜைகளும், வழிபாடுகளும் நடக்கும். இதை அக்னி கழிவு என்று கொண்டாடுவார்கள். அதேபோல் கிராமப் பகுதிகளில் அம்மன் கோயில்களில் கொடை விழா என்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் அக்னி நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா என்பது உள்ளிட்ட பல சந்தேகங்கள் பலருக்கும் உள்ளது. அது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

அக்னி நட்சத்திரத்தில் செய்ய கூடியவை

உபநயனம்

சிறுவர்களுக்கு பூணூல் அணிவிக்கும் விழாவிற்கு பெயர் உபநயனம். இந்த உபநயன நிகழ்வுகளை அக்னி நட்சத்திர காலத்தில் செய்யலாம்.

திருமணம்

அக்னி நட்சத்திரத்தில் வீடுகளில் திருமணங்களை செய்யலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. ஆனால் அக்னி நட்சத்திர காலத்தில் திருமணங்கள் செய்வதற்கு எந்த தடங்களும் இல்லை.

யாகங்கள்

பூஜைகள் யாகங்கள் செய்வதற்கு அக்னி நட்சத்திர காலத்தில் தடங்கள்கள் இல்லை.

சத்திரங்கள்

அக்னி நட்சத்திர காலத்தில் சதிரங்கள் கட்டுவதற்கும் எந்த தடங்கள்களும் இல்லை.

அக்னி நட்சத்திர காலத்தில் செய்ய கூடாதவை

மரம் வெட்டுதல் விதை விதைத்தல்

அக்னி நட்சத்திர காலத்தில் செடி கொடி மரங்கள் வெட்டுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். நார் உறிப்பதையும் தவிர்க்க வேண்டும் அது விஷேசம் இல்லை.

வீடு நிலம் வாங்குதல்

அக்கினி நட்சத்திர காலம் வீடு நிலம் வாங்குவதற்கு தகுந்த காலம் இல்லை.

அதேபோல் கிணறு வெட்டுவதையும் அக்னி நட்சத்திரத்தில் செய்ய கூடாது. அதேபோல் கிரக பிரவேசம் செய்வது , புது வீட்டிற்கு குடி பெயர்தல் போன்ற காரியங்களை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும். மேலும் தீட்சை எடுத்தல் போன்ற காரியங்களுக்கான பூஜையையும் அக்னி நட்சத்திர காலத்தில் தொடங்க கூடாது.

புதிய வாகனம் வாங்குதல்

அக்னி நட்சத்திரத்தில் புதிய வண்டி, வாகனம் வாங்குதல் போன்ற காரியங்களை செய்ய கூடாது.

தேவதா பிரதிஷ்டை

கோயில்களில் தெய்வங்களை பிரதிஷ்டை செய்வது, கும்பாபிஷேகம் செய்தல் போன்ற தெய்வ காரியங்கள் செய்வதை தவிர்க்க கண்டிப்பாக வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்