தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Watch How People In Delhi-ncr, J&k Fled Homes As Quake Shakes India, Pak And Afghanistan

Earthquake: இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்! பாதிப்பு நிலவரம்

Mar 22, 2023, 06:28 PM IST

சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு இருந்ததாக கூறப்பட்டுள்ளது. வட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இந்த நிலநடுக்கமானது உணரப்பட்டது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், டெல்லி என்சிஆர் பகுதிகளில் நிலநடுக்கமானது உணரப்பட்ட நிலையில் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர். நிலநடுக்கத்தால் கட்டிங்கள் குலுங்கிய போதிலும், பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியால் பொதுமக்கள் தெருக்களில் சில மணி நேரம் கூடியிருந்தனர். அதேபோல் இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்புகள் அல்லது பொருள் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கம் தொடர்பான பல்வேறு விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.