தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  கட்டவிழ்த்துவிடப்பட்ட நாய்! சர்ச்சையில் சிக்கிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

கட்டவிழ்த்துவிடப்பட்ட நாய்! சர்ச்சையில் சிக்கிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

Mar 15, 2023, 11:36 PM IST

  • பிரட்டன் பிரதமர் ரிஷி சுனக் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். தனது செல்ல வளர்ப்பு நாயை அழைத்துக்கொண்டு குடும்பத்தினருடன் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார் சுனக். அப்போது பூங்கா ஒன்றில் தனது நாயை கட்டவிழ்த்து தனியாக உலாவ விட்டுள்ளார். இது விதிமுறையை மீறிய செயல் என போலீசார் அவரிடம் அறிவுறுத்தியுள்ளனர். லண்டனில் உள்ள ஹைட் பார்க்கில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ள நிலையில், சுனக்கின் வளர்ப்பு நாய் நோவாவும் தனியாக சுற்றிக்கொண்டிருக்கும் விடியோவும் வெளியாகி வைரலாகியுள்ளது. பொதுமக்களுக்கும் மற்ற விலங்குகளுக்கு எவ்வித ஆபத்துகளும் ஏற்படாமல் இருக்க நாய் வைத்திருப்பவர்கள் அதை அவிழ்த்து தனியே உலாவ விடக்கூடாது என்பது விதிமுறையாக உள்ளது. ஆனால் இதை சுனக் மீறிய நிலையில், போலீசாரின் தலையீட்டுக்கு பிறகு தனது நாயின் கழுத்தை பிடித்து சங்கிலியால் இணைத்துள்ளார். பொது இடத்தில் இதுபோல் சர்ச்சையில் சிக்குவது ரிஷி சுனக்குக்கு முதல் தடவை இல்லை. கடந்த ஜனவரி மாதம் காரில் பயணித்த அவர் விடியோ ஷுட் செய்வதற்காக சீட் பெல்ட்டை கழிட்டியதற்காக அபராதம் செலுத்தினார். அதேபோல் கடந்த ஆண்டில் கோவிட் கட்டுப்பாடுகளை மீறு பார்ட்டி ஒன்றில் பங்கேற்றதாக சுனக் மற்றும் அப்போது பிரிட்டன் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் ஆகியோருக்கு 50 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது.