தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  கடும் உணவு தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் கோதுமை மூட்டை திருட்டு! வைரல் விடியோ

கடும் உணவு தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் கோதுமை மூட்டை திருட்டு! வைரல் விடியோ

Mar 21, 2023, 06:28 PM IST

Pakistan Food Crisis: பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பல்வேறு பகுதிகளில் உணவு பொருள்கள், தானியங்களை பெறுவதில் பொதுமக்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. தானியம், கோதுமை மூட்டைகளை எடுத்துக்கொள்வதில் பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு சண்டையிடும் காட்சிகள் அதில் இடம்பிடித்துள்ளன. லாகூர், இஸ்லாமாபாத் பகுதிகளில் வாகனத்தில் கோதுமை மூட்டைகளுடன் வரும் வாகனஹ்களை தடுத்து நிறுத்த அதிலிருந்து கோதுமை மூட்டை பைகளை திருடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் எப்போது நடைபெற்றன என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகவில்லை. ரஷ்யா - உக்ரைன் போர், பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் போன்றவை அங்கு ஏற்பட்டிருக்கும் உணவு தட்டுப்பாடுக்கு காரணமாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். கடந்த 2020இல் அமெரிக்க டாலர் 1.01 பில்லியன் அளவில் கோதுமையை பாகிஸ்தான் இறக்குமதி செய்துள்ளது. இதில் ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் இருந்து அதிகளவில் பாகிஸ்தானுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் தற்போது இரு நாடுகளுக்கு இடையே போர் நிகழ்ந்து வருவதால் உள்நாட்டு கோதுமை உற்பத்தியானது குறைந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க பாகிஸ்தானில் இருந்த ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை மூட்டைகள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. 1975ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் மிகப் பெரிய அளவு பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் விலை விண்ணை தொடும் அளவு உயர்ந்தது. இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையாகவும் சந்தைகள் விரைவிலேயே மூட வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.