தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Shivamogga Airport:ரூ. 450 கோடி செலவில் கர்நாடகாவில் புதிய விமான நிலையம் திறப்பு

Shivamogga Airport:ரூ. 450 கோடி செலவில் கர்நாடகாவில் புதிய விமான நிலையம் திறப்பு

Mar 03, 2023, 06:36 PM IST

  • கர்நாடக மாநிலத்தின் முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக ரூ. 3,600 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்காக பிரதமர் மோடி ஷிவமோக்கா நகரில் அடிக்கல் நாட்டினார். அத்துடன் புதிதாக கட்டப்பட்ட ஷிவமோக்கா விமான நிலையத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.இந்த விமான நிலையத்தின் மூலம் மாநிலத்தின் பிற பகுதிகள் மற்றும் மற்ற மாநிலங்களுக்கு இணைப்பு எளிமையாக்கப்பட்டுள்ளது. ரூ. 450 கோடி மதிப்பில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 300 பயணிகள் வரை கையாளும் விதமாக இந்த விமான நிலையம் கட்டமைக்கப்பட்டுள்ளது. முதல் கன்னட எழுத்தாளராக அறியப்படும், ஜநான்பித் விருதை வென்றவரும், ஷிவமோக்கா பகுதியை சேர்ந்தவருமான குவெம்பு என்பவரின் பெயர் இந்த விமான நிலையத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த விமான நிலையத்தில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பெயரை வைக்க பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், அதை ஏற்க மறுத்த அவர் பின்னர் குவெம்பு பெயரை பரிந்துரைத்தார். விரைவில் கர்நாடகாவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த புதிய விமான நிலையம் திறப்பு மற்றும் புதிய திட்டங்களுக்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டுள்ளது.