தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Istanbul Bomb Attack: சிசிடிவி! இஸ்தான்புல் நகரில் குண்டுவெடிப்பு - 6 பேர் பலி

Istanbul bomb attack: சிசிடிவி! இஸ்தான்புல் நகரில் குண்டுவெடிப்பு - 6 பேர் பலி

Nov 14, 2022, 02:59 PM IST

துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் அமைந்துள்ள பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இஸ்திக்லால் என்ற வீதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 6 பேர் சம்பவ இடத்தில் பலியான நிலையில், ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என துருக்கி நாட்டின் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். இதுவரை இந்த வெடிகுண்டு விபத்தில் 53 பேர் காயமடைந்திருப்பதாக தெரியவந்துள்ள நிலையில், அவர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வெடிகுண்டு தாக்குதல் தீவிரவாதிகளின் சதி செயலாக இருக்ககூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு காட்சி அங்கிருந்த சிசிடிவி காட்சி ஒன்றில் பதிவாகியுள்ளது. அதிர்ச்சியூட்டும் விதமாக அமைந்திருந்த இந்தக் காட்சி காண்போரை திகைப்புக்குள்ளாக்கியது. பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் ஞாயிற்றுக்கிழமையன்று இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வுக்கு பின்னர் ஹெலிஹாப்டரில் வானில் பறந்து சைரன் ஒலியுடன் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு துருக்கி ஜனாதிபதி கண்டனம் தெரிவித்ததோடு, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். சுற்றுலா பயணிகள், உள்ளூர் வாசிகளின் புகழ் பெற்ற ஷாப்பிங் மையமாக திகழு் இஸ்திக்லால் பகுதில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டிலும் இந்தப் பகுதியில் இதுபோன்ற தாக்குதல் நடைபெற்றுள்ளது. அந்த தாக்குதல் ஐஎஸ்ஐஎஸ் நடத்தியதாக கூறப்பட்ட நிலையில், அதில் 500 பேர் உயிரிழந்துள்ளார். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்புக்கு பிறகு உள்ளூர் ஊடகங்கள் இதுதொடர்பான செய்திகளை சேகரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.