தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Fifa 2022: டி-ஷர்ட்டால் எழுந்த சர்ச்சை! அமெரிக்க செய்தியாளர் தடுத்து நிறுத்தம்

FIFA 2022: டி-ஷர்ட்டால் எழுந்த சர்ச்சை! அமெரிக்க செய்தியாளர் தடுத்து நிறுத்தம்

Nov 22, 2022, 09:55 PM IST

உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடர்பாக செய்தி சேகரிக்க வந்த அமெரிக்காவை சேர்ந்த ஸ்போர்ட்ஸ் செய்தியாளரான கிராண்ட் வாஹ்ல் என்பவர், போட்டி நடைபெறும் ஸ்டேடியத்துக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டார். இதற்கு காரணமாக அவர் அணிந்திருந்த டி-ஷர்டில் வானவில் டிசைன் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டது. அமெரிக்கா - வேல்ஸ் நாடுகளுக்கு இடையே அகமத் பின் அலி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியை காண்பதற்காக அமெரிக்காவை சேர்ந்த செய்தியாளர் கிராண்ட் வாஹ்ல் வந்துள்ளார். அவர் ஸ்டேடியத்தின் உள்ளே நுழையும்போது பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதுபற்றி விசாரித்தபோது, அவர் அணிந்திருக்கும் டி-ஷர்ட் தொடர்பாக ஆட்சோபனை தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி டுவிட்டரில் பகிர்ந்த கிராண்ட், தன்னை டி-ஷர்ட் மாற்றிக்கொண்டு வருமாறு கத்தார் நாட்டை சேர்ந்த அலுவலர் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தின்போது வலுக்கட்டாயமாக எனது கைககளை தள்ளிவிடப்பட்டது. சுமார் 25 நிமிடங்கள் என்னை தடுத்து வைத்தனர். பின்னர் பாதுகாவலர்களின் அலுவலர் வந்த நடந்த விஷயங்களுக்கு வருத்தம் தெரிவித்து என்னை உள்ளே செல்ல அனுமதித்ததார். அப்போது பாதுகாவலர் ஒருவர் ரசிகர்களால் ஆபத்து எதுவும் நேராமல் இருப்பதற்காக தான் என்னை தடுத்ததாக பேசியதை கேட்டேன். இந்த விவகாரத்தில் பிபா சார்பிலும் வருத்தம் தெரிவிக்கப்பட்டது என்று தனக்கு நேர்ந்த சம்பவம் பற்றி விரிவாக குறிப்பிட்டுள்ளார். செய்தியாளர் கிராண்ட் அணிந்த டி-ஷர்ட் LGBTQ சமூகத்தை குறிப்பதாக அமைந்திருக்கும் நிலையில், பழமைவாத நாடான கத்தாரில் அதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேபோட்டியில் ரசிகர்கள் பலரும் வானவில் வண்ணத்திலான தொப்பிகள் அணிந்து போட்டியை கண்டுகளித்துள்ளனர்.