தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Isro Last Pslv Mission Of 2022:9 செயற்கை கோள்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ

ISRO last PSLV mission of 2022:9 செயற்கை கோள்களை விண்ணில் வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ

Nov 26, 2022, 11:57 PM IST

இந்த ஆண்டின் கடைசி பிஎஸ்எல்வி மிஷனை நிகழ்த்தியுள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ. 9 செயற்கோள்களை அடங்கிய பிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதில் ஒரு கடல் சார் ஆராய்ச்சி செயற்கைகோளும், எட்டு நானே சாட்டிலைட்களும் அனுப்பப்பட்டுள்ளன. இந்த செயற்கைகோள்கள் அனைத்து இந்தியா மற்றும் பூட்டானை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டவை. இந்த நிகழ்வு இந்தியாவில் வளர்ந்து வரும் தனியார் மற்றும் பிறநாட்டுடனான இருதரப்பு விண்வெளி பணிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த நிகழ்வை இந்தியா - பூட்டான் இடையேயான கூட்டுறவில் வரலாற்று மைல்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது ஏவப்பட்டிருக்கும் இந்த ராக்கெட்டானாது பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 56வதாகவும், நடப்பாண்டில் ஐந்தாவது ராக்கெட்டாகவும் அமைந்துள்ளது.