தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Worker Killed In Kumari After Drinking Pesticide Mistaking It For Water

குமரியில் சோகம்..தண்ணீர் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த தொழிலாளி உயிரிழப்பு!

Divya Sekar HT Tamil

Apr 01, 2023, 11:36 AM IST

அழகியபாண்டியபுரம் அருகே தண்ணீர் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அழகியபாண்டியபுரம் அருகே தண்ணீர் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அழகியபாண்டியபுரம் அருகே தண்ணீர் என நினைத்து பூச்சி மருந்தை குடித்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி : அழகியபாண்டியபுரம் பெருந்தலைக் காடு பகுதியை சேர்ந்தவர் ராமையன் (65), தொழிலாளி. இவர் தேங்காய் வெட்டும் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தெள்ளாந்தி காலனி பகுதியை சேர்ந்த சிவகாமி என்பவரின் தென்னந்தோப்பில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் வெட்டி விட்டு கீழே இறங்கினார்.

ட்ரெண்டிங் செய்திகள்

இனி வெயிலுக்கு குட் பாய் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு.. அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யுமாம்.. எங்கு தெரியுமா?

Thanjavur Big Temple: தஞ்சை பெரிய கோயில் தொடர்பான வீடியோ சர்ச்சை..அறநிலையத்துறை அளித்த விளக்கம் இதோ..!

Stone Quarry Explosion: தமிழகத்தை உலுக்கிய கல்குவாரி வெடிவிபத்து.. எப்ஐஆரில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Weather update: சுட்டெரிக்கும் வெயில் .. தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் - வானிலை மையம் எச்சரிக்கை

அப்போது அவருக்கு தாகம் ஏற்பட்டுள்ளது. அங்கு வாழைகளுக்கு அடிக்க தண்ணீரில் கலந்து வைத்திருந்த பூச்சி கொல்லி மருந்தை அவர் தண்ணீர் என நினைத்து குடித்துவிட்டார். இதனால் அவர் மயங்கி விழுந்தார். 

உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பூதப்பாண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சி கிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

டாபிக்ஸ்