தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Cctv: நள்ளிரவில் வீடு புகுந்த முகமூடி திருடன்..திகில் சிசிடிவி காட்சிகள்!

CCTV: நள்ளிரவில் வீடு புகுந்த முகமூடி திருடன்..திகில் சிசிடிவி காட்சிகள்!

Apr 29, 2024 12:31 PM IST Karthikeyan S
Apr 29, 2024 12:31 PM IST
  • கரூர் மாவட்டம் மாரிகவுண்டன்பாளையம் கிராமத்தில் ஒரு குடும்பத்தினர் கோடை வெயில் காலம் என்பதால் வீட்டை பூட்டி விட்டு முன்புறம் உள்ள முட்டத்தில் கட்டில் போட்டு தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது சுற்றுச் சுவரை ஏறிக் குறித்து உள்ளே சென்ற மர்ம நபர் அங்கு தூங்கும் பெண்களின் கழுத்தில் தங்க நகைகள் இருக்கிறதா என்று டார்ச் லைட் அடித்து பார்த்துச் சென்றுள்ளான். வேட்டியை சுருட்டி கட்டிக் கொண்டும், சட்டையை கழட்டி முகம் தெரியாமல் இருக்க துணியை கட்டிக் கொண்டு அரை நிர்வாணத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் நோட்டமிட்டுச் சென்ற சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படாத நிலையில் இக்காட்சிகளை கொண்டு வாங்கல் போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
More