தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Pbks Vs Rcb Innings Break: கோலி, பட்டிதார் மிரட்டல் அடி! மழை குறுக்கீடு மத்தியில் ஆர்சிபி ரன் மழை - பஞ்சாப்புக்கு சவால்

PBKS vs RCB Innings Break: கோலி, பட்டிதார் மிரட்டல் அடி! மழை குறுக்கீடு மத்தியில் ஆர்சிபி ரன் மழை - பஞ்சாப்புக்கு சவால்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 09, 2024 10:01 PM IST

மழை குறுக்கீடு காரணமாக போட்டி சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் தாமதமானது. மழையால் பிட்ச் செயல்பாடு மாறிய நிலையில் அதன் நன்கு பயன்படுத்தி பஞ்சாப் பவுலர்களுக்கு எதிராக கோலி, பட்டிதார் ஆகியோர் மிரட்டல் அடியால் ஆர்சிபி அணி 241 ரன்கள் குவித்துள்ளது.

பஞ்சாப்புக்கு எதிராக மிரட்டல் அடி அடித்த கோலி, பட்டிதார்
பஞ்சாப்புக்கு எதிராக மிரட்டல் அடி அடித்த கோலி, பட்டிதார் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஹர்ப்ரீத் ப்ரார், ககிசோ ரபாடா ஆகியோருக்கு பதிலாக வித்வீத் கவீரப்பா, லயாம் லிவிங்ஸ்ட்ன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆர்சிபி அணியில் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக லாக்கி பெர்குசன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த இரு அணிகளுக்கு இடையே பெங்களுருவில் நடைபெற்ற முதல் மோதலில் ஆர்சிபி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி பஞ்சாப், ஆர்சிபி ஆகிய இரு அணிகளுக்கும் ப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைக்கும் போட்டியாக உள்ளது.

பஞ்சாப் பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகபட்சமாக விராட் கோலி 92, ராஜத் பட்டிதார் 55, கேமரூன் க்ரீன் 46 ரன்கள் எடுத்துள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ் பவுலர்களில் ஹர்ஷல் படேல் 3, வித்வாத் கவீரப்பா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். சாம் கரன், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

கோலி - பட்டிதார் பார்ட்னர்ஷிப்

ஆர்சிபி ஓபனரும் கேப்டனுமான டூ பிளெசிஸ் 9, மூன்றாவது பேட்ஸ்மேனாக வந்த வில் ஜேக்ஸ் 12 ரன்கள் அடித்து அவுட்டாகி ஏமாற்றினார்.

இதைத்தொடர்ந்து மற்றொரு ஓபனரும், ராஜத் பட்டிதாரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த கூட்டணி 76 ரன்கள் சேர்த்தது. இதில் பட்டிதார் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட, கோலி பொறுமையை கடைபிடித்தார்.

அரைசதத்தை பூர்த்தி செய்த பட்டிதார் 23 பந்தில் 55 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் தனது இன்னிங்ஸில் 6 சிக்ஸர், 3 பவுண்டரிகளை அடித்தார்.

சதத்தை மிஸ் செய்த கோலி

பொறுப்புடன் பேட் செய்த கோலி முதலில் நிதானத்தை கடைப்பிடித்தார். அரைசதத்தை அடித்த பின்னர் அதிரடிக்கு மாறிய அவர் விரைவாக ரன்களை விளாச தொடங்கினார். 47 பந்துகளில் 92 ரன்கள் அடித்த கோலி சதத்தை மிஸ் செய்து அர்ஷ்தீப் பந்தில் அவுட்டானார். கோலி தனது இன்னிங்ஸில் 6 சிக்ஸர், 7 பவுண்டரிகளை அடித்தார்.

க்ரீன் கேமியோ ஆட்டம்

மிடில் ஆர்டரில் களமிறங்கி கடைசி வரை பேட் செய்த கேமரூன் க்ரீன் கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்தி பினிஷ் செய்தார்.

அதேபோல், கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் 7 பந்துகளில் 18 ரன்கள் அடித்துவிட்டு வெளியேறினர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point